சிலந்தி படத்தை தயாரித்த ஜி.கம்பெனி உருவாக்கி வரும் படம் இது. சங்கர் தயாரிப்பில் சஞ்ஜெய் கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார். இந்தப் படத்தில் பைக் பந்தய வீரரான ஹரீஷ் நாயகனாக நடித் துள்ளார். சமீபத்தில் பெங்களூர்- மைசூர் நெடுஞ்சாலையில் 20 ரேஸ் பைக்குகளை கொண்ட சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது.
இந்த சண்டைக் காட்சியில் நாயகன் ஹரிஷின் நண்பர்களும் பங்கேற்று அசத்தியிருக்கின்றனராம். நிறைய ரிஸ்க் எடுத்து இந்த காட்சியை படமாக்கி உள்ளனர். ஷிவ் எனும் மாடல் இந்த படத்தில் வில்லனாக அறிமுகமாகிறார். சூர்யா இசையமைத்துள்ளார். தலக்கோணம், மைசூர் மற்றும் பாங்காங்க் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. |