ஸ்ரீ நடராஜா ஆர்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் ‘மாயாண்டி குடும்பத்தார்’ பட நாயகி பூங்கொடி நாயகியாக நடிக்கிறார்.மற்றொரு பிரபல நடிகையும் நடிக்க உள்ளாராம்.
மாயாண்டி குடும்பத்தாரில் நடித்த 10 இயக்குனர்களில் சிங்கம், புலி, ஜெகன்னாத், நந்தா பெரியசாமி, ஜி.எம்.குமார், இளவரசு உள்ளிட்ட 5 பேர் இந்த படத்தில் நடிக்கின்றனராம்.
‘ஆசை ஆசையாய்’ படத்தை இயக்கிய ரவி மரியா இயக்குகிறார். சபேஷ் முரளி இசையமைத்துள்ளார். ‘நான் கடவுள்’ படத்தில் நடித்த தாண்டவன் வெயில் வெங்கடேஷ் மற்றும் அஞ்சாதே ஸ்ரீதர் ஆகிய மூவர் வில்லனாக மிரட்ட உள்ளனராம். |