ராஜாதி ராஜாவை தொடர்ந்து இயக்குனர் ஷக்தி சிதம்பரம் மற்றொரு ரஜினி பட தலைப்போடு களமிறங்குகிறார். குருசிஷ்யன் படத்தின் பெயர். ஏற்கனவே பல படங்களில் அவரோடு இணைந்து பணியாற்றியுள்ள சத்யராஜ் மற்றும் இயக்குனர் சுந்தர்.சி. இந்த படத்தில் நடிக்கின்றனர்.
.
இந்த கூட்டணியில் குருசிஷ்யன் ஆக்ஷன் கலந்த காமெடி படமாக இருக்குமாம். சினிமா பேரடைஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தீனா இசையமைத்துள்ளார்.
சத்யராஜோடு இணைந்து பணியாற்றுவது உற்சாகமான அனுபவம் என்கிறார் ஷக்தி சிதம்பரம். சத்யராஜின் நகைச்சுவை உணர்வும் அபாரமானது என்று அவர் பாராட்டுகிறார்.
பஞ்ச் வசனங்களிலோ அல்லது அதிரடியிலோ நம்பிக்கை இல்லை என்று கூறும் ஷக்தி சிதம்பரம் ரசிகர்களை மகிழ்விப்பதே தனது வேலை என்கிறார்.