
‘சுப்பிரமணியபுரம்’, ‘பசங்க’, ‘நாடோடிகள்’ என ஹாட்ரிக் வெற்றி கொடுத்த சசிகுமார் அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார். எனினும் இந்த படத்தில் அவர் நடிக்கப் போவதில்லை. இயக்கத்தோடு நிறுத்திக் கொள்ள உள்ளார். ‘நாடோடிகள்’ இயக்குனர் சமுத்திரக்கனி இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம். நாடோடிகளில் தனது நடிப்பின் மூலம் அனைவரையும் வியக்க வைத்த வாய் பேசாத மற்றும் காது கேளாத அபிநயா இந்த படத்திலும் நடிக்க உள்ளார்.