மிகவும் சிறிய பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் இந்த படம் எடுக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் பாடல் வெளியீட்டு விழாவும் சமீபத்தில் நடைபெற்றது.
காசு இருக்கணும், எங்க ராசி நல்ல ராசி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள விஷ்வா இந்தபடத்தின் திரைக்கதை சிறப்பாக இருப்பதாக இயக்குனருக்கு சான்றிதழ் தருகிறார்.
நேசன் இசையமைக்க மகா துரையே பாடல்களை எழுதியுள்ளார். வெங்கட் குலசேகரன், தயாளன், ஜெயந்தி மாலா வேணுகோபால் தயாரித்துள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. |