Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
உயிர் நனைகிறதே
 
.
Sunday, 12 July, 2009 12:05 PM
.
 காதல் தோல்வியோடு வாழ்க்கை முடிவதில்லை. அதற்கு பின்னரும் வசந்தம் வீசும் வாழ்க்கை இருக்கிறது என்பதை ‘உயிர் நனைகிறதே’ படத்தின் மூலம் சொல்லப் போகிறாராம் இயக்குனர் ஏ.ஆர்.விஜயஷங்கர். இந்த படம் இளைஞர்களுக்கு சேதி சொல்லும் படமாக இருக்கும் என்றும் அவர் நம்புகிறார். கா.ராஜா முகமது தயாரிக்கும் இந்த படத்தில் பிரபா, தேஜாஸ்ரீ ஜோடியாக நடிக்கின்றனர்.
.
இயக்குனர் லிங்குசாமியின் உறவினரான பிரபா ஏற்கனவே ஒலியும் ஒளியும், மிட்டாய் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
அனுபம்கர் நடிப்புக் கல்லூரியில் பயின்ற சூர்யகாந்த் வில்லனாக நடித்திருக்கிறார். கதை முழுவதும் மயிலாடுதுறையில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. முக்கியமான சில காட்சிகள் விருத்தாசலம், கடலூரில் படமாக்கப்பட உள்ளது.பாடல் காட்சிகளுக்காக வெளிநாடு செல்லவும் திட்டமிட்டுள்ளனர். எழில் ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.
| |

மற்றவை :