மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
சொந்த முயற்சியாலும், மனதுணிவுட னும் செயல்பட்டு வாழ்க்கையில் முன்னேறும் மேஷ ராசியினரே இந்தவாரம் ராசியாதிபதி செவ்வாய் சுக்கிரனுடன் சேர்க்கை பெற்று இருப்பது காரியங்களில் அவசரமாக செயல்படச் செய்யும். நிதானத்தை கடைபிடிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். பேச்சில் கோபம் தெரியாவிட்டாலும் அழுத்தம் இருக்கும். சில சிக்கலான பிரச்சனைகளில் சுமுகமான முடிவை காண முற்படுவீர்கள். சூரியன் சஞ்சாரம் ராசிக்கு 4ல் வார இறுதியில் தொடங்குவதால் மனதடுமாற்றம் ஏற்படலாம். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.
தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். பணவரத்து எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் தேவை பூர்த்தியாகும். புதிய ஆர்டர்கள் பற்றி உடனடியாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றமான நிலை உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது.
குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கலாம். எல்லோரையும் அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன், மனைவிக் கிடையே திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பிள்ளை களிடம் அன்பாக பழகுவது நன்மை தரும். உறவினர் வகையில் மனவருத்தம் ஏற்படலாம்.
பெண்களுக்கு: சிக்கலான விஷயங்களை கூட சுமுகமாக முடித்து விடுவீர்கள். மனதடுமாற்றம் இல்லாமல் நிதானமாக செயல்படுவது நன்மைதரும்.
மாணவர்களுக்கு: கல்விக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவது பற்றிய கவலை நீங்கும். படிப்பில் ஆர்வம் உண்டாகும்.
சந்திராஷ்டமம்: இல்லை.
பரிகாரம்: பழனி முருகனை வணங்கி வர பல நாட்களாக இழுபறியான காரியம் வெற்றிகரமாக முடியும். மனகவலை நீங்கும்.
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)
இனிய சுபாவமும், மென்மையான பேச்சும் உடைய ரிஷபராசியினரே இந்த வாரம் ராசியில் செவ்வாய் ராசியாதிபதி சுக்கிரனுடன் சேர்ந்து இருப்பது பொன்பொருள் சேர்க்கையை தரும். ஆனால் அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் வில்லங்கம் ஏற்படலாம் எச்சரிக்கை யாக இருப்பது நல்லது. மனதில் ஏதாவது குறை இருக்கும். புதிய நபர்கள் எதிர்பாலினத்தவர் ஆகியோருடன் பேசும் போது கவனமாக பேசி பழகுவது நல்லது. விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி வரலாம்.
தொழில் வியாபாரம் செய்பவர்கள் பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் காண்பிப்பார்கள். ராசிக்கு 3ல் வார இறுதியில் சூரிய சஞ்சாரம் இருப்பதால் போட்டிகள் விலகும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நாட்களாக இருந்த இழுபறியான காரியங் களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக் கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். குழந்தைகள் மூலம் மனநிம்மதி கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் இருந்த மனகசப்பு மாறும்.
பெண்களுக்கு: எதைபற்றியாவது நினைத்து கவலைபடுவீர்கள். வாக்குறுதிகள் கொடுக்கும் போது கவனம் தேவை. விருந்து நிகழ்ச்சியில்
மாணவர்களுக்கு: கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு படிக்க முற்படுவீர்கள். சக மாணவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: பவுர்ணமியில் பூஜை செய்து அம்மனை வணங்க எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும் மனகவலை நீங்கும்.
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)
காலம் தாழ்த்தாமல் எதையும் உடனுக் குடன் செய்து முடிக்க வேண்டும் என்ற வேகம் கொண்ட மிதுன ராசியினரே இந்த வாரம் ராசிக்கு இரண்டில் வார இறுதியில் சஞ்சாரம் செய்ய உள்ள சூரியனால் திடீர் கோபம் ஏற்படலாம். மேலும் கேது ராசியாதிபதி புதன் சேர்க்கை பெற்று இரண்டில் இருப்பதால் எல்லாவற்றிலும் நெருக்கடி நிலை காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தள்ளி போடுவது நன்மை தரும். பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். தொழில் வியாபாரம் வழக்கம் போல் நடக்கும்.
வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து பேசுவது நல்லது. லாபம் குறைவது போல் இருந்தாலும் பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு வீணாகும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களிடம் கோபமாக பேசுவதை தவிர்த்து இதமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக் கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். குழந்தைகள் எதிர்கால நலன்பற்றி சிந்திப்பீர்கள். உங்களது உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வதுநல்லது.
பெண்களுக்கு: எந்த காரியத்திலும் நெருக்கடியான நிலை உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்படும். பணவரத்து திருப்தி தரும்.
மாணவர்களுக்கு: பாடங்களை படிக்க வேண்டிய கட்டாயம் உண்டாகும். ஆசிரியர் மற்றும் சக மாணவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.
சந்திராஷ்டமம்: இல்லை.
பரிகாரம்: கும்பகோணம் அருகே உள்ள உப்பிலியப்பன் கோயில் பெருமாளை வணங்க முன் ஜென்ம பாவம் நீங்கும். குடும்பம் சுபிட்சமடையும்.
கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
அன்பும் பாசமும் கருணையும் ஒருங்கே அமையப்பெற்ற கடகராசியினரே இந்த வாரம் ராசியில் சஞ்சாரம் செய்யும் கேது, புதன் உடல் அசதியை தரலாம். மனதில் ஏதாவது கவலை இருந்து கொண்டே இருக்கும். திட்டமிட்டு செயலாற்றுவதில் பின்னடைவு ஏற்பட லாம். பக்தியில் நாட்டம் அதிகரிக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர் களுடன் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். பயணங்களில் தடங்கல் ஏற்படலாம். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் உறுதியாக இருப்பீர்கள்.
தொழில் வியாபாரம் தொடர்பான சிக்கல்கள் தீரும். பணவரத்து திருப்திதரும். வாடிக்கையாளர்களுக்கு உத்தரவாதங்கள் தரும்போது கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு இருப்பது போல் உணர்வார்கள். மேல் அதிகாரிகள் உங்கள் செயல்களில் குறை காணலாம் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளின் படிப்பில் அக்கறை காட்டுவது நல்லது.
பெண்களுக்கு: காரியங்களில் பின்னடைவு ஏற்படலாம். மற்றவர்களிடம் சில்லறை சண்டைகள் ஏற்படாமல் இருக்க கவனமாக பேசி பழகுவது நல்லது.
மாணவர்களுக்கு: கல்வியில் இருந்த மெத்தன போக்கு மாறும். புத்தகம் நோட்டுகளை இரவல் கொடுக்கும் போது கவனம் தேவை.
சந்திராஷ்டமம்: 12.7.09 அன்று முழுவதும் மற்றும் 13.7.09 அன்று காலை 6.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல் தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை.
பரிகாரம்: மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரியை வணங்க பிரச்சனைகள் சுமுகமாக முடியும். மனக்குறை நீங்கும்.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டு தனித்தன்மையுடன் செயலாற்றும் குணமுடைய சிம்மராசியினரே இந்த வாரம் ராசியில் சஞ்சரிக்கும் சனியை குரு பார்ப்பதால் உடல்நிலை தேறும். செலவு கட்டுக்குள் இருக்கும். காரிய தடைகள் நீங்கும். ராசியாதிபதி சூரியன் சஞ்சாரம் ராசிக்கு 12ல் வார இறுதியில் சஞ்சாரம் செய்வதால் தந்தையாரின் நலனில் அக்கறை தேவை. கொடுக்கல் வாங் கலில் கவனமாக செயல்படுவது நல்லது.
தொழில் வியாபாரத்தில் மெத்தன போக்கு காணப்பட்டாலும் பணவரத்து சுமாராக இருக்கும். சரக்குகளை கவனமாக கையாள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் உண்டாகலாம்.
குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் நீங்கி ஒற்றுமை உண்டா கும். உறவினர்களுக்காக விருப்பம் இல்லாத காரியத்தில் தலையிட வேண்டி இருக்கும். கேதுவின் சஞ்சாரம் ஆன்மீகத்தில் நாட்டத்தை ஏற்படுத்தும்.
பெண்களுக்கு: தடைபட்ட காரியங்கள் நடந்து முடியும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து குறையலாம்.
மாணவர்களுக்கு: கல்வியில் நாட்டம் உண்டாகும். போட்டிகள் நீங்கும். சக மாணவர்களுடன் இருந்த மனகசப்பு மாறும்.
சந்திராஷ்டமம்: 13709 அன்று காலை 6.15 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்கி 15709 அன்று பகல் 1.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல் தடைதாமதம் ஏற்படலாம் கவனம் தேவை.
பரிகாரம்: பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரையும், சிவபெருமானையும் வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரியங்கள் திருப்திகரமாக நடக்கும்.
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)
எதையும் ஒருமுறை பார்த்தாலே அதை பற்றி கிரகித்துக் கொள்ளும் திறமை உடைய கன்னி ராசியினரே இந்த வாரம் ராசியாதிபதி புதன் ராசிக்கு 11ல் கேதுவுடன் சேர்ந்து சஞ்சாரம் செய்வதால் நெருக்கடியான பிரச்சனைகள் நீங்கும். பணவரத்து அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பயணங்களும் அவற்றால் நன்மைகளும் உண்டாகும். சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபடுவீர்கள். வார இறுதியில் சூரியன் 11ல் சஞ்சரிக்க உள்ளதால் மற்றவர்கள் மேல் இரக்கம் ஏற்படும். நீண்டநாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும்.
தொழில் வியாபாரம் முன்னேற்றமாக நடக்கும். லாபம் அதிகரிக்கும். உத்தி யோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைவால் மகிழ்ச்சியுடன் காணப் படுவார்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும்.
குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக் கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை சேரும். உறவினர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும்.
பெண்களுக்கு: திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடித்து மன நிம்மதி அடைவீர்கள். பணவரத்து அதிகரிக்கும். மற்றவர்கள் மேல் இரக்கம் உண்டாகும். மாணவர்களுக்கு: கல்வியில் முன்னேற்றம் காண திட்டமிட்டு படித்து வெற்றி பெறுவீர்கள். மன மகிழ்ச்சி ஏற்படும் சம்பவங்கள் நிகழும்.
சந்திராஷ்டமம்: 15072009 அன்று பகல் 130 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்கி 17709 மாலை 6.40 மணி வரை இருப்பதால் புதிய முயற்சிகளை தள்ளிபோடுவது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகலாம்.
பரிகாரம்: திருநின்றவூர் ஸ்ரீபக்தவத்சலப் பெருமாளை வணங்கி வர சகலதோஷங் களும் நீங்கும். இழந்த சொத்து மீண்டும் கைக்கு வந்து சேரும்.
துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
காரியத்தை கச்சிதமாக முடிக்கும் திறமையும் சாதித்தே தீர வேண்டும் என்ற பிடிவாதமும் கொண்ட துலா ராசியினரே இந்த வாரம் தடைபட்ட காரியங்கள் தடைநீங்கி நன்றாக நடந்து முடியும். ராசிக்கு 10ல் கேதுவும் புதனும் சஞ்சாரம் செய்வது வாக்குவன்மையால் நன்மை கள் ஏற்படும். தெய்வ சிந்தனை அதிகரிக் கும். பண பிரச்சனை நீங்கும். வார இறுதி யில் ராசிக்கு 10ல் சஞ்சாரம் செய்ய உள்ள சூரியனால் நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும்.
தொழில் வியாபாரம் எதிர்பார்த்த வளர்ச்சி பெறும் பழைய பாக்கிகள் வசூலாகும். நீண்ட நாட்களாக நடந்து முடியாத காரிய ஒன்று நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாக திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும்.
குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக் கிடையே விட்டுக் கொடுக்கும் மனப் பான்மை அதிகரிக்கும். பிள்ளைகள் எதிர்காலத்திற்காக சில பணிகளை மேற்கொள்வீர்கள்.
பெண்களுக்கு: கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இழுபறியாக இருந்த காரியம் நன்கு நடந்து முடியும்.
மாணவர்களுக்கு: கல்வியில் திறமை வெளிப்படும். மற்றவர் பாராட்டும் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: 170709 மாலை 6.40 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்கி 18709 அன்று முழுவதும் சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல், காரிய தாமதம் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளி போடுவதும் நல்லது.
பரிகாரம்: கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி மகாலட்சுமியை வணங்க கடன் பிரச்சனை தீரும். பணவரத்து அதிகரிக்கும்.
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
நியாயத்தின் பக்கம் நிற்கும் விருச்சிக ராசியினரே நீங்கள் அநியாயத்தை எதிர்க்கும் குணமுடையவர். இந்த வாரம் எதிலும் கவனமாக செயல்படுவதும் எச்சரிக்கையாக இருப்பதும் நல்லது. ராசிக்கு 9ல் புதனும், கேதுவும் சஞ்சாரம் செய்வதால் எதையும் நிர்ணயிக்கும் திறன் குறையும். பணவரத்து தாமதப் படும். கையிருப்பு கரையும். மற்றவர்க ளுக்காக உதவி செய்யும் போது வீண்பழி சொல் கேட்க நேரலாம். கவனமாக இருப் பது நல்லது. உடல் சோர்வும் ஏற்படலாம்.
தொழில் வியாபாரம் தொடர்பாக அலைச்சல் இருக்கும். ராசிக்கு 9ல் வார இறுதியில் சூரியன் சஞ்சாரம் இருப்பதால் பழைய பாக்கிகள் வசூலிப்பதில் இழுபறி யான நிலை காணப்படும். உத்தியோகத் தில் இருப்பவர்கள் வீணாக உழைக்க நேரிடும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதற்குள் பல தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செய்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவ தன் மூலம் நன்மைகள் உண்டாகும். பிள்ளைகளிடம் அன்புடன் நடந்து கொள்வது நல்ல பலன் தரும்.
பெண்களுக்கு: எதிலும் நல்லது கெட்டதை நிர்ணயிக்கும் திறமை குறையும். அடுத்தவர் பிரச்சனை தீர்க்க உதவி செய்வதை தவிர்ப்பது நல்லது.
மாணவர்களுக்கு: மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது நல்லது. அடுத்த வரை நம்பி காரியங்களை செய்வதை தவிர்ப்பது நன்மை தரும்.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: சஷ்டி விரதம் இருந்து முருகனை வணங்க குடும்ப பிரச்சனை கள் தீரும். மனகவலை அகலும்.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
யாருடைய அதிகாரத்துக்கும் கட்டுப் படாமல் தனித்தன்மையுடன் விளங்கும் தனுசு ராசியினரே இந்த வாரம் ராசியாதி பதி குருவின் பார்வையால் எதிலும் சாதக மான பலன் கிடைக்கும். தடைபட்ட பணம் வந்து சேரும். ராசிக்கு எட்டில் கேதுவும், புதனும் சஞ்சாரம் செய்வதால் பயணங்கள் உண்டாகும். அதனால் நன்மையும் ஏற்படும். உங்களது செயல் கள் மற்றவர்களை கவரும் விதத்தில் இருக்கும். ஆனால் மனதில் ஏதாவது கவலை இருந்து கொண்டிருக்கும். மற்றவர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.
தொழில் வியாபாரம் சுறுசுறுப்படையும். வியாபார விரிவாக்கம் செய்வது பற்றி ஆலோசனை மேற்கொள்வீர்கள். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத் தில் இருப்பவர்கள் காரிய அனுகூலம் கிடைக்க பெறுவார்கள். புத்திசாதூரியத் தால் காரிய நன்மை பெறுவார்கள்.
குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் உங்களது சொல்படி நடப்பது மனதுக்கு இதம் அளிக்கும். செயல் திறன் அதிகரிக்கும்.
பெண்களுக்கு: உங்களது செயல்களுக்கு மற்றவர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். பயணங்கள் மூலம் சாதக மான பலன்கள் உண்டாகும். மாணவர்களுக்கு: கல்வியில் திறமை வெளிப்படும். ஆசிரியர்கள் பாராட்டு வார்கள். சக மாணவர் மத்தியில் மதிப்பு கூடும்.
சந்திராஷ்டமம்: இல்லை.
பரிகாரம்: விநாயகரை அருகம்புல் மாலை போட்டு வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள்.
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)
பார்த்தால் கடுமையானவர் போல் தோற்றமளிக்கும் ராசியினரே நீங்கள் பழகினால் இனிமையானவர். இந்த வாரம் ராசியாதிபதி சனி எட்டில் சஞ்சரித்து காரிய தடைகளை ஏற்படுத்தி னாலும் கும்பத்தில் சஞ்சரிக்கும் குரு பார்வை யால் தடைகள் நீங்கும். உடல் ஆரோக்கி யம் பெறும். 7ல் சஞ்சரிக்கும் கேது, புதன் மூலம் வீண் அலைச்சல் ஏற்படலாம். சில நேரங்களில் நிர்பந்தத்தின் பேரில் விருப்பமில்லாத வேலை செய்ய நேரலாம்.
தொழில் வியாபாரத்தில் பார்ட்னர் விவகாரங்களில் கவனம் தேவை. ஆர்டர்கள் கிடைப்பது திட்டமிட்டபடி இல்லாமல் தாமதமாகும். வேலையாட்க ளிடம் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். நினைத்தபடி பணிகளை செய்ய முடியாத நிலை உருவாகும்.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் திடீர் மனஸ்தாபங்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே கருத்துவேற்றுமை ஏற்படும். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. எதிலும் எச்சரிக்கை யாக செயல்படுவது நன்மை தரும்.
பெண்களுக்கு: எதிலும் எச்சரிக்கையாக வும் கவனமாகவும் இருப்பது நல்லது. மனதடுமாற்றம் உண்டாகலாம். செலவு கூடும்.
மாணவர்களுக்கு: அதிக நேரம் பாடங் களை ஒருமுறைக்கு இருமுறை படித்து கவனத்தில் வைத்துக் கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: சோளிங்கர் யோக நரசிம்மரை வணங்க உடல் ஆரோக்கியம் பெறும். மனக்கவலை நீங்கும்.
கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)
தன்னலம் கருதாமல் பிறர் நலத்தை மனதில் கொண்டு செயல்படும் கும்ப ராசியினரே, இந்த வாரம் எல்லாவகையி லும் லாபம் கிடைக்கும். ராசிக்கு ஆறாம் இடத்தில் கேதுவும் புதனும் சேர்க்கை பெறுவது வாக்கு வன்மையால் எதுவும் சாதகமாக நடக்கும். நல்ல சிந்தனை உண்டாகும். அறிவுதிறன் அதிகரிக்கும். சில நேரங்களில் மற்றவர்கள் பேசுவதை தவறாக புரிந்து கொள்ள நேரிடும், மனோ தைரியம் அதிகரிக்கும்.
தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். போட்டிகள் குறையும். புதிய வாடிக்கை யாளர்கள் கிடைப்பார்கள். தொழில் ரீதியான காரியங்களில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்ப வர்கள் மேன்மை அடைவார்கள். மேல் அதிகாரிகள் கூறிய படி காரியங்களை செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.
குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும் உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்க பெறுவீர்கள். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.
பெண்களுக்கு: நல்ல சிந்தனை ஏற்படும். மனோ பலம் அதிகரிக்கும். சாதூரியமான பேச்சால் எளிதாக எதையும் செய்து முடிப்பீர்கள்.
மாணவர்களுக்கு: புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து கல்வியில் வெற்றி பெற நன்கு படிப்பீர்கள்.
சந்திராஷ்டமம்: இல்லை.
பரிகாரம்: சனி பகவானை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்க எல்லா காரியங்களும் வெற்றிபெறும். துன்பங்கள் விலகும்.
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
எதிர்காலத்தை மனதில் கொண்டு செயல்பட்டு வரும் மீன ராசியினரே நீங்கள் காலத்தை வீணாக்க மாட்டீர்கள். இந்த வாரம் ராசியாதிபதி குரு ராசிக்கு 12ல் சஞ்சாரம் செய்வதால் பணதேவை உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் அவப்பெயர் உண்டாக லாம். பயணங்கள் மூலம் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். ராசிக்கு 5ல் கேதுவும் புதனும் சஞ்சரிப்பதும் ராசிக்கு 4ல் உள்ள சூரியன் வார இறுதியில் 5ம் இடத்திற்கு வருவதும் திடீர் மன குழப்பத்தை ஏற்படுத்தும். முக்கிய முடிவு எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும்.
தொழில், வியாபாரம் பற்றிய கவலை உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். வேலை மாறுதல் பற்றிய எண்ணம் உண்டாகும்.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
பெண்களுக்கு: பண தேவை அதிகரிக்கும். எதிலும் உடனடியாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். வேலை பளு அதிகரிக்கும்.
மாணவர்களுக்கு: பாடங்கள் படிப்பதில் மெத்தனம் காணப்படும். கல்வியில் வேகம் காட்டுவது வெற்றிக்கு நல்லது.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்தி பகவானை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மன குழப்பம் நீங்கும். |