Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
குஜராத்தில் "பாணா காத்தாடி'
 
.
Sunday, 05 July, 2009 10:35 AM
.
"பாணா காத்தாடி' படப்பிடிப்பு குழு குஜராத்திற்கு சென்று பட்டம் விட தயாராகி வருகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கும் படம் "பாணா காத்தாடி'. இதில் நடிகர் முரளியின் மகன் அகர்வா நாயகனாக நடிக்கிறார். சமந்தா நாயகியாக நடிக்கிறார்.
.
கருணாஸ், அஞ்சாதே பிரசன்னா உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை.  விடியலை நோக்கி குறும் படத்திற்காக தேசிய விருது பெற்ற பத்ரி வெங்கடேஷ் படத்தை இயக்குகிறார்.

செந்தில் தியாகராஜன் மற்றும் டி.அர்ஜுன் இணைந்து தயாரிக் கின்றனர். பட்டம் விடும் இளைஞர்கள் வாழ்வில் நடைபெறும் நிகழ்ச்சிகளை புதிய கோணத்தில் சொல்லும் இந்த படத்திற்காக குஜராத் செல்ல இருக்கின்றனராம்.

ஆண்டுதோறும் குஜராத்தில் சர்வதேச அளவில் நடைபெறும் பட்டம் விடும் போட்டி மிக பிரபல மானது. இந்த போட்டியின் போது சில காட்சிகளை படமாக்குவதற்குதான் ஆகஸ்ட்டில் படபிடிப்பு குழு குஜராத் செல்ல உள்ளது. 3 ஆயிரம் துணை நடிகர்களை கொண்டு இந்த காட்சியை படமாக்க உள்ளனராம்.
| |

மற்றவை :