Maalaisudar



 
 
 
 
 
 
 




.
காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள்
 
.
Sunday, 05 July, 2009 10:26 AM
.
 கவிஞர் தபுசங்கர் இயக்குனராகி இருக்கிறார். "வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்' எனும் கவித்துவமான தலைப்பில் புதிய படத்தை அவர் இயக்குகிறார். "குங்குமப்பூவும், கொஞ்சும் புறாவும்' படத்தில் நாயகனாக நடித்த ராமகிருஷ்ணன் இதில் நாயகன். அவருக்கு ஜோடி புதுமுகம் வெண்ணிலா.
.
சில்வர் ஜூப்ளி மூவிஸ், அரவிந்த் புரொடக்ஷன்ஸ் சார்பில் ராமச்சந்திரன், பாவேந்தர், திவான், மோகன்ராஜ் ஆகியோர் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிக் எப்எம் தினா, இயக்குனர் செல்வபாரதி, கஞ்சா கருப்பு, மனோ பாலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு முதலில் லைலா மஜ்னு என்றுதான் பெயரிட திட்டமிட்டிருந்தனராம். ஆனால் கதைக்கேற்ப கவித்துவமான தலைப்பு வேண்டும் என்பதால் தபுசங்கரின் கவி வரியே தலைப்பாக இருக்கிறது. கவித்துவமான முறையில் காதலை சொல்லியிருப்பதாகவும், இன்றைய இளைஞர்கள் கூடும் இடத்தில் கதை நடப்பதாகவும் கூறும் தபுசங்கர் பலருக்கு எப்படி காதலை வெளிப்படுத்துவது என்றே தெரியவில்லை என்றும், இந்த படம் இப்படியெல்லாம் கூட காதலிக்கலாமா என நினைக்க வைத்து காதலை கற்றுத் தரும் என்கிறார்.

அதற்கேற்ப கதையில் வில்லனே கிடையாது. ஆனால் விறுவிறுப்பாக இருக்கும் என்கிறார். நாயகன் ராமகிருஷ்ணா இந்த படத்தில் நடிப்பது வித்தியாசமான அனுபவம் என்கிறார். இதில் இவர் ஓவியராகவும், வெண்ணிலா நடனமணியாகவும் வருகின்றனராம். இந்த படத்தில் இயக்குனர் செல்வபாரதி வித்தியாசமான அப்பாவாக நடித்திருக்கிறாராம்.
| |

மற்றவை :