திருமலை கிரியேஷன்ஸ் சார்பில் பி.எஸ்.கோபால் தயாரிக்கும் படம் "உச்சக்கட்டம்'. நவீன் இயக்கும் இந்த படத்தில் ஜெமினி நாயகனாகவும், புளோரா நாயகியாகவும் நடிக்கின்றனர். நவீன், பி.சி.ஸ்ரீராம், கே.எஸ்.ரவிக் குமாரிடம் உதவியாளராக பணியாற்றியவர்.
.
கன்னட அழகி சுவாதி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். புளோரா மற்றும் ஸ்வேதா கவர்ச்சியில் போட்டி போட்டு நடித்துள்ளனராம். கோவாவில் சுவாதி நீச்சல் உடையில் நடித்த காட்சி படமாக்கப்பட்டுள்ளது. ஒரு முத்தக் காட்சியில் நாயகன் ஜெமினி அடுத்தடுத்து டேக் வாங்க புளோரா சளைக்காமல் முத்தம் கொடுத்து நடித்திருக்கிறாராம்.
இந்தப் படத்தில் கஞ்சா கருப்பு சிவகங்கை கருப்பாக நடித்துள்ளார். படத்தின் தயாரிப்பாளர் பி.எஸ். கோபால் வில்லனாக நடித்திருக் கிறார். சார்லஸ் மெல்பின் இசை யமைத்துள்ளார்.