"தொட்டால் பூ மலரும்', "மகேஷ் சரண்யா' மற்றும் பலர் படங்களில் நடித்த பிறகு இவர் நடிக்கும் முதல் படம் இது. இந்தப் படத்தில் மலையாள படவுலகை சேர்ந்த ரோமா நாயகியாக தமிழுக்கு அறிமுகமாகிறார். கேரளா வில் முன்னணி நடிகையாக உள்ளவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசன் தயாரிப்பில் வைஜெயந்தி மாலா, ஜெமினி கணேசன் நடித்த படத்தின் பெயரை கொண்ட இப் படத்தின் மற்றொரு சிறப்பம்சமாக பழம்பெரும் பாடலாசிரியர் உளுந்தூர்பேட்டை சண்முகத்தின் மகன் ஷங்கர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
புதுமைபித்தன், லவ்லி ஆகிய படங்களை இயக்கிய எஸ்.கே.ஜீவா இந்தப் படத்தை இயக்குகிறார். நாசர், சரண்யா, சத்யன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பாடல்களை வாலி எழுதியுள்ளார். தமிழ் சினிமாவில் முதல் பெண் எடிட்டரான கிருத்திகா படத் தொகுப்பை கவனிக்கிறார். |