இந்தப் படத்தில் எதார்த்தமான கல்லூரி வாழ்க்கையை பார்க்கலாம். 7 பேர் மத்தியிலான தூய்மையான நட்பை இந்த படம் விவரிக்கிறது. படத்திற்கு புகைப்படம் என பெயர் வைக்க காரணம் இருக்கிறது.
எந்த போட்டோவை எடுத்து பார்த்தாலும் உடனே அந்த படம் எடுக்கப்பட்ட காலத்திற்கு நம்முடைய நினைவுகள் செல்லும். இப்படி பின்னோக்கி செல்வது எல்லோருக்கும் பிடித்த விஷயம். போட்டோவை வைத்து நாம் நினைவுப்படுத்திக் கொள்ளும் ஒரு கற்பனையான உலகிற்கான அழகான பெயர்தான் "புகைப்படம்.
இளையராஜா இசையை கேட்டு வளர்ந்தவன் நான். அவரது இசைதான் என்னை வளர்த்தது. எனது படத்திற்கு அவரே இசையமைக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் சில காரணங்களால் அது சாத்தியமாகவில்லை. எனவேதான் அவரது சகோதரர் கங்கை அமரன் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் 7 புதுமுகங்கள் நடித்துள்ளன.
அம்ஜத், ஹாரிஸ், சிவம், பிரியா என எல்லோருமே புதுமுகங்கள் என்று தோன்றாமல் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். படம் முழுக்க கொடைக்கானலில் எடுத்திருக் கிறோம். இந்தப் படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. |