இப்படி அழகாக போகிறது பூவா, தலையா படத்தின் கதை. இதுவரை அருவாள், ஆக்ரோஷம் என அதிரடியாக கதைச் சொல்லி சஞ்சை ராம் மாறுபட்ட முறையில் இயக்கி இருக்கும் படம் இது. இந்தப் படத்தில் அக்ரஹாரத்து அழகியாக ஷெரின் நடித்திருக்கிறார்.
பாவாடை, தாவணி, கண்ணாடி என கவர்ச்சி பட்டாம்பூச்சியாக அவர் வலம் வர கிருஷ்ணகுமார் கொம்புத்தேவன் எனும் பாத்திரத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். இந்தப் படத்திற்காக ஆடிக் காத்துக்கு மத்தியில் தீக்கோழி எனும் பாடல் படமாக்கப்பட்டுள்ளது.
லிங்கம் தியேட்டர்ஸ் சார்பில் சஞ்சை ராம் தயாரிக்கும் இந்தப் படம்அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது. பீட்டர் ஜான் இசையமைத் துள்ளார். பாடல்களை இயக்குனரே எழுதியுள்ளார். |