இளையராஜாவின் காலத்தை வென்ற பாடல்களில் ஒன்றான "ஆயிரம் தாமரை மொட்டுக்களே' பாட்டு இதில் இடம் பெறுகிறது. ராஜாவின் ரசிகரான இயக்குனர் அந்த பாடலை ரிமிக்ஸ் எனும் பெயரில் பாழாக்க விரும்பாமல், சிறிய சேதாரம் கூட இல்லாமல் அப்படியே படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்.
படத்தின் தலைப்பு "வைகை'. அதற்கு காதலும், காதல் சார்ந்த இடமும் என்று கவிதையாக ஒரு துணை தலைப்பும் வைத்திருக் கின்றனர். படத்தின் கதை கற்பனை அல்ல. நிஜத்தில் நடந்ததாம்.
மதுரை திருமங்கலத்திற்கு அருகே நடந்த உண்மைக் கதையை படமாக்கி இருப்பதாக கூறும் இயக்குனர் சுந்தரபாண்டி, நிஜ கதையின் மாந்தர்களே இதில் நடித்திருப்பதாக கூறுகிறார். சம்பந்தப்பட்டவர்களின் முழுமை யான சம்மதத்தோடு கிளைமாக்சில் அவர்கள் தோன்றுவது போல படமாக்கப்பட்டுள்ளதாம். பாலாவைஷாலி நடிக்க சபேஷ் முரளி இசையமைத்துள்ளார். ஒரு பாடலை நடிகர் சிலம்பரசன் பாடியுள்ளார். |