Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
21.06.09 முதல் 27.06.09 வரை
 
.
Sunday, 21 June, 2009 04:18 PM
.

மேஷம் (அஸ்வினி, பரணி,  கார்த்திகை 1ம் பாதம்)

அடுத்தவர் ஆலோசனையை கேட்டாலும் முடிவில் சொந்த அறிவில் செயல்படும் மேஷராசியினரே இந்த வாரம் வீண்கவலை ஏற்பட்டு நீங்கும். செலவு அதிகரிக்கும். ராசிக்கு 3ல் சஞ்சாரம் செய்யும் புதன் இடமாற்றத்தை ஏற்படுத்துவார். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படலாம். வார தொடக்கத்தில் அடுத்தவருக்கு உதவபோய் வீண் பிரச்சனையில் சிக்கிக் கொள்ள நேரலாம் கவனமாக இருப்பது நல்லது. புதிய நட்பு உண்டாகலாம்.

தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும். வியாபாரம் தொடர்பான அலைச்சலும் புதிய ஆர்டர் பற்றிய கவலையும் ஏற்படும். உத்தி யோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர் களுடன் அனுசரித்து செல்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும்.  குடும்பத்தில் நீண்டநாட்களாக இருக்கும் பிரச்சனை தீரும்.  கணவன் மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். சகோதரர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. பிள்ளைகளால் டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பெண்களுக்கு: எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாக லாம். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை.
மாணவர்களுக்கு:  கல்வியில் வெற்றி பெற தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: வடபழனி முருகனை வணங்கி வர தொல்லைகள் நீங்கும். நன்மை உண்டாகும்.

.

ரிஷபம் கார்த்திகை 2, 3, 4 பாதம்,  (கிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

எண்ணியத்தை எப்பாடுபட்டாவது செயல்படுத்த வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு செயல்படும் ரிஷபராசியினரே, இந்த வாரம் கோபத்தை குறைத்து வார மத்தியில் சஞ்சரிக்கும்  புதன் மற்றவர்களுடன் வீண்பகையை உண்டாக்குவார். எனவே  கவனமாக செயல்படுவது நல்லது. அடுத்தவரின் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம் அனுசரித்து செல்வது நன்மைதரும்.

தொழில் வியாபாரத்தில் மெத்தன போக்கு காணப்படும். தொழில் தொடர் பான   அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கை யாளர்களை அனுசரித்து செல்வது வியாபார வெற்றிக்கு உதவும். உத்தி யோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சக பணியாளர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.  குடும்பத்தில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதம் உண்டாகலாம் கவனம் தேவை.  பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். நண்பர்கள் உறவினர்கள் மூலம் நன்மை ஏற்படும்.   

பெண்களுக்கு: எதிலும் மெத்தன போக்கு காணப்படும். வீண் அலைச்சல் ஏற்படலாம்.  கோபத்தை குறைப்பது நன்மை தரும்.
மாணவர்களுக்கு: கல்வியில் முன்னேற்ற மடைய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்:  பவுர்ணமி பூஜை செய்து மகாலட்சுமியை வணங்கி வர கடன் பிரச்சனை தீரும். மன அமைதி உண்டாகும்.

மிதுனம் மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்  திருவாதிரை,  புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

எதையும் சுலபமாக புரிந்த கொள்ளக் கூடிய மிதுன ராசியினரே நீங்கள் பதட்ட குணத்தை கைவிடுவது முன்னேற்றத் துக்கு உதவும் இந்த வாரம் ராசியாதிபதி புதன் வார மத்தியில் ராசியில் சஞ்சாரம் செய்வது காரிய தாமதத்தை உண்டாக் கும். ஏதாவது ஒருவகையில் மனகுழப்பம் ஏற்பட்டு நீங்கும். சாதாரணமாக பேசப்போக அது சண்டையாக மாறலாம் கவனம் தேவை.  வேளை தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். பொருட் களை  கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது.

தொழில் வியாபாரம் தொடர்பாக அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர் களுக்கு சரக்குகளை அனுப்பும் போது பாதுகாப்பாக அனுப்புவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு காரணமாக அலைய வேண்டி இருக்கும்.  குடும்பத்தினருடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக் கிடையே மனவருத்தம் ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளை களிடம் அன்புடன் பேசுவது நன்மை தரும்.

பெண்களுக்கு: வீண் மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். உடமைகளை கவன மாக பாதுகாத்துக் கொள்வது நல்லது.
மாணவர்களுக்கு: கல்வி பற்றிய வீண்பயம் ஏற்பட்டு நீங்கும். வாகனங் களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: சுந்தரகாண்டம் படித்து பெருமாளை வணங்கி வர சகல நன்மை களும் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.

கடகம் புனர் பூசம் 4ம் பாதம், சம், ஆயில்யம்)

எப்பொழுதும் பரபரப்பாக காணப் படும் கடகராசியினரே நீங்கள் சூழ்நிலைக் கேற்றவாறு செயல்படுவதில் வல்லவர். ராசியாதிபதி சந்திரன் சஞ்சாரம் வார மத்தியில் நன்மைதரும். பணவரவு கூடும். செய்யும் காரியத்தில் மனதிருப்தி கிடைக்கும். ராசிக்கு 12ல் புதன் சஞ்சாரம் வார மத்தியில் தொடங்குவதால் அடுத்தவர்களுக்காக  எந்த பொறுப் பையும் ஏற்காமல் இருப்பது நல்லது.  மற்றவர்களுக்காக  வீண் அலைச்சல், செலவு செய்ய வேண்டி இருக்கும்.

தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடந்தாலும்  எதிர்பார்த்த லாபம் குறைய லாம். வியாபாரம் தொடர்பான பணம் பரிவர்த்தனையில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எவ்வளவு  உழைத்தாலும் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில்  தாமதம் உண்டாகும்.  குடும்பத்தில் இருந்த பிரச்சனை தீரும். ஆனால் வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பம் சம்பந்தப்பட்ட காரியங்கள் சரிவர நடக்காமல் தடைதாமதம் ஏற்படலாம். பிள்ளைகள் நலனுக்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

பெண்களுக்கு: மனத்திருப்தியுடன் காரியங்களை  செய்து முடிப்பீர்கள். பணவரத்து கூடும்.
மாணவர்களுக்கு: எதிர்கால கல்வி பற்றி எடுத்த முடிவுகள் மனதிருப்தியை அளிக்கும். அலைச்சல் அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: பிரத்தியங்கரா தேவியை வணங்கி வர எதிர்ப்புகள் அகலும். துன்பங்கள் நீங்கும்.

சிம்மம் மகம், பூரம்,  உத்திரம் 1ம் பாதம்)

அதிகார மிடுக்கும் தயாள குணமும் கொண்ட சிம்மராசியினரே இந்த வாரம். ராசியில் சஞ்சரிக்கும் சனியை குரு பார்ப்பதால் மனதில் இருந்த டென்ஷன் குறையும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். ராசிக்கு 11ல் வார மத்தியில் புதன் சஞ்சாரம் இருப்பதால் விரும்பிய படி காரியங்கள் நடக்கும். நீண்ட தூர தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும்.

தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். லாபம் எதிர்பார்த்தபடி  இருக்கும். புதிய வாடிக்கையாளர்கள் ஏற்படுவதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்ப வர்கள் ஏற்கனவே செய்த வேலைகளுக்கு இப்போது பாராட்டும் பண உதவியும் கிடைக்க பெறலாம். டும்பத்தில் இருந்த டென்ஷன் குறைந்து சந்தோஷமான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கி டையே  மகிழ்ச்சியான உறவு நிலவும். பிள்ளைகளின் நடத்தை மனதுக்கு  நிம்மதியை தரும்.

பெண்களுக்கு: எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவல்களாக வந்து சேரும். டென்ஷன் குறையும்.
மாணவர்களுக்கு: தேர்வு முடிவுகள் பற்றி இருந்த டென்ஷன் நீங்கும். புதிய நட்புகள் மூலம் உதவி கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: சிதம்பரம் நடராஜ பெருமானை  பூஜித்து வணங்கி வர எல்லா பிரச்சனைகளும் நல்ல முடிவுக்கு வரும். மன அமைதி கிடைக்கும்.

கன்னி உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

எழுத்தாற்றலும், பேச்சாற்றலும் கொண்ட கன்னி ராசியினரே இந்த வாரம் ராசியாதிபதி புதன் சஞ்சாரம் எதிர்பார்த்த நல்ல பலன்களை தரும். திறமையான பேச்சின் மூலம் காரியங்களை சாதிப்பீர்கள். எதிர்த்து செயல்பட்டவர்கள்  விலகிச் சென்று விடுவார்கள். தெய்வ பிரார்த்தனை மனதுக்கு நிம்மதியையும், ஆறுதலையும் தரும். சூரியன் சஞ்சாரத் தால் பணவரத்து கூடும். அரசாங்க காரியங்கள் சாதகமாக பலன்  தரும்.

தொழில் வியாபாரம் லாபகரமாக  நடக்கும். தொழில் விரிவாக்கம் தொடர் பான திட்டங்கள் செயல்படுத்த முயற்சி மேற்கொள்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர் கள் வேலைபளு குறைந்து உற்சாகமாக காணப்படுவார்கள். எடுத்த காரியம் வெற்றி பெறுவதால் மேல் அதிகாரிகளி டம் பாராட்டு கிடைக்கும். டும்பத்தில் ஒற்றுமைகாணப்படும்.  கணவன் மனைவிக்கிடையே இருந்த  கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

பெண்களுக்கு: வாக்கு வன்மையால் காரியங்கள் வெற்றி பெறும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும்.
மாணவர்களுக்கு: கல்வி பற்றிய மனசஞ்சாரம் நீங்கி நிம்மதி உண்டாகும். பெரியோர் பாராட்டு கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வணங்கி வர காரிய வெற்றி உண்டாகும். செல்வ சேர்க்கை ஏற்படும்.

துலாம் சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)

எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அதை ஒரு நடுநிலைமையுடன் கையாளும் திறன் படைத்த துலா ராசியினரே! நீங்கள் தீர்க்கமான எண்ணமுடையவர்கள் இந்த வாரம் பணவரவு திருப்தி தரும். ஆனால் வீண் செலவுகளை தவிர்ப்பது நன்மை தரும்.  ராசிக்கு 9ல் வார மத்தியில் நன்மை தரும். ராசிக்கு 9ல் வார மத்தியில் புதன் சஞ்சாரம் இருப்பதால் எந்த ஒரு வேலையையும் செய்யும் முன் அதில் உள்ள நல்லது கெட்டதை ஆராய்ந்து செய்வது நல்லது. பயன் தராத முயற்சிகளை தவிர்ப்பது நன்மை தரும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகவும் சாமர்த்தியமாக செயல்படுவது நன்மை தரும். தொழில் போட்டிகள் உண்டாகலாம். அனுசரித்து செல்வது முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர் கள் குறிக்கோளற்ற வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். டும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையில் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும். பிள்ளைகளை தட்டி கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உறவினர் நண்பர்களிடம் டென்ஷன் இல்லாமல் போவது நல்லது.

பெண்களுக்கு: பயன்தராத முயற்சி களை கைவிட்டு எந்த ஒரு வேலை யையும் ஆராய்ந்து செயல்படுவது வெற்றியை தரும்.
மாணவர்களுக்கு: எதிர்கால நலன் கருதி எந்த காரியத்தையும் செய்வது நன்மை தரும்.
சந்திராஷ்டமம்: 21.06.2009 மற்றும் 22.06.2009 பகல் 1.40 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல் காரிய தடை தாமதம் உண்டாகலாம். கவனம் தேவை.
பரிகாரம்: கனகராதா ஸ்தோத்திரம் படித்து லட்சுமியை வணங்க எல்லா நலன்களும் உண்டாகும். காரிய அனுகூலம் கிடைக்கும்.

விருச்சிகம் விசாகம் 4ம் பாதம்,அனுஷம், கேட்டை)

எந்த நிலையிலும் தன்னம்பிக்கை யுடன் செயல்படும் விருச்சிக ராசியினரே நீங்கள் பிடிவாத குணத்தை தளர்த்திக் கொண்டால் எதிலும் முன்னேற்றம் காண முடியும். இந்த வாரம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். ராசிக்கு எட்டில் சஞ்சரிக்கும் புதன் பலவகை யோகத்தை தரும்.  வெளியூர் பயணங்கள் சாதகமான பலன் தரும்.

தொழில் வியாபாரம் மூலம் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழில் வியாபார வளர்ச்சிக்கு தேவையான ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்ப வர்கள் புத்திசாதுரியத்தால் அலுவலக வேலைகளை திறமையாக செய்து முடித்து மதிப்பும் மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். டும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கி டையே ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். வீடு, வாகனங்கள் புதுப்பிக்க அல்லது புதிதாக வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதில் சாதகமான பலன் கிடைக்கும்.

பெண்களுக்கு: மன குழப்பம் நீங்கி தெளிவான  சிந்தனை மேலோங்கும். பயணங்கள் வெற்றியை தரும்.
மாணவர்களுக்கு:  புத்தி சாதூரியத்தால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். மற்றவர்க ளின் பாராட்டும் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: 22.06.2009 பகல் 1.40 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்கி 24.06.2009 மாலை 4 மணி வரை இருப்பதால் புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது தடை தாமதம் உண்டாகலாம்.
பரிகாரம்: வைத்தீஸ்வரன் கோயில் வைத்திய நாதஸ்வாமி, முத்துக்குமரனை வணங்கி வர உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்ப்புகள் விலகும்.

தனுசு மூலம், பூராடம்,  உத்திராடம் 1ம் பாதம்)

மற்றவர்களின் கட்டாயத்திற்காக எந்த காரியத்தையும் செய்யாத தனுசு ராசியினரே! நீங்கள் எதையும் ஆராய்ந்து செய்வதில் கெட்டிக்காரர். இந்த வாரம் எந்த இடத்தில் பேசும்போதும் கவனமாக பேசுவது நல்லது. வாக்குறுதிகளை கொடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். ராசிக்கு 7ல் வார மத்தியில் புதன் சஞ்சாரம் தொடங்குவதால் விருப்பத் திற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம். மனம் தளராமல் இருப்பது நல்லது. வீண் ஆசைகள் தோன்றலாம்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்களை அனுசரித்து செல்வது வியாபார வளர்ச்சிக்கு உதவும். தொழில் தொடர்பான அலைச்சல் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. டும்ப விஷயத்தில் அந்நிய நபர்களின் தலையீட்டை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக் கொருவர் விட்டு கொடுத்து செல்வது மன அமைதியை தரும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகளிடம் அன்பாக பேசுவது நன்மை தரும்.

பெண்களுக்கு: எந்த நிலையிலம்  மனம் தளராது காரியங்கள் செய்வது வெற்றியை தரும். வாக்குறுதிகளை தவிர்க்கவும்.
மாணவர்களுக்கு: யாருக்கும் உத்திர வாதம் அளிக்காமல் இருப்பது நல்லது. கல்வியில் கூடுதல் கவனம் தேவை.
சந்திராஷ்டமம்: 24.06.2009 மாலை 4 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்கி 26.6.2009 மாலை 6.30 மணி வரை இருப்பதால் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.
பரிகாரம்: விநாயக பெருமானை வணங்கி வர எல்லா காரியங்களும் தடை நீங்கி சாதகமான பலன் தரும்.

மகரம் உத்திராடம் 2, 3, 4 பாதம்,  திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

திட்டமிட்டு காரியங்களை செய்து வெற்றி காணும் மகர ராசியினரே! நீங்கள் தயக்க குணத்தை விடுவது வெற்றிக்கு உதவும். இந்த வாரம் காரிய அனுகூலம் உண்டாகும். வார மத்தியில் புதன் சஞ்சாரம் ராசிக்கு 6ல் இருப்பதால் மனதில் தைரியம் அதிகரிக்கும். வீட்டிலும் வெளியிலும் உங்களது செயல்களுக்கு ஆதரவு கிடைக்கும். ராசியில் ராகு இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வாடிக்கையாளர்கள்  மத்தியில் மதிப்பு கூடும். உத்தியோகத் தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். டும்பத்தில் அமைதியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடை யில் நெருக்கம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் கிடைக்கும்.

பெண்களுக்கு: நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மாணவர்களுக்கு:  கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.
சந்திராஷ்டமம்: 26.6.09 மாலை 6.30 முதல் சந்திராஷ்டமம் தொடங்கி 27.6.09 அன்று முழுவதும் இருப்பதால் காரிய தடை தாமதம் உண்டாகலாம். கவனம் தேவை.
பரிகாரம்: சனிக்கிழமையில் சனி பகவானை நல்லெண்ணை தீபம் ஏற்றி வணங்க காரிய தடை நீங்கும். மன குழப்பங்கள் குறையும்.

கும்பம் அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)

புதிய இடங்களில் திறமையை வெளிப்படுத்த தயங்கும் குணமுடைய கும்பராசியினரே நீங்கள் இரக்க சிந்தனை நிறைந்தவர்கள். இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும். ராசிக்கு 5ல் புதன் வார மத்தியில் சஞ்சாரத்தை தொடங்குவதால் எதிலும் உடனடியாக முடிவு எடுக்க முடியாத நிலை ஏற்படும். மற்றவர்கள் மத்தியில் உங்களது பேச்சுக்கு முக்கியத்து வம் இருக்காது. எனவே அறிவுரைகள் கூறுவதை தவிர்ப்பது நல்லது.

தொழில் வியாபாரத்தில் ஒரு சில சிக்கலான கட்டங்களை சந்திக்க நேரிடும். ஆனால் முடிவில் எதிர்பார்த்த படி சாதகமான பலன் கிடைக்கும். கூடுதலான லாபம் கிடைக்க அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோ கத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்ச லும், மன சோர்வும் அடைய நேரிடும். டும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் நிம்மதியை பாதிப்பதாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் இடைவெளி ஏற்படலாம். பிள்ளைகள் மூலம் வீண் செலவு, சிறு பிரச்சனைகள் உண்டாக நேரலாம். கவனமாக இருப்பது நல்லது.

பெண்களுக்கு: எதிலும் உடனடி முடிவு கிடைக்காமல் இழுபறியான நிலை காணப்படும். மற்றவர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.
மாணவர்களுக்கு: கல்வி தொடர்பான விஷயங்களில் வீண் அலைச்சல் உண்டாகும். எதையும் செய்யும்போது கவனமாக இருப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: குலதெய்வத்தை வணங்கி வர கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

மீனம் பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

கடின உழைப்பும் நேர்மையான போக்கும் கொண்ட மீன ராசியினரே நீங்கள் புதுமையான சிந்தனைகளை உடையவர் இந்த வாரம் செலவு குறையும். எதிலும் அவசர முடிவு எடுப்பதை தவிர்ப்பது நல்லது. ராசிக்கு 4ல் வார மத்தியில் புதன் சஞ்சாரம் தொடங்குவதால் எதையும் ஆக்கபூர்வ மாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். மன தெளிவு உண்டாகும். திடீர் இடமாற்றம் உண்டாகலாம்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல் பட்டு வெற்றி காண்பார்கள். ஆனால் மனதில் ஏதாவது குறை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்படுவார்கள். நிர்வாகத்தினரின் ஆதரவும் கிடைக்க பெறுவார்கள். டும்பத்தில் நிம்மதியும் சுகமும் உண்டாகும். கணவன், மனைவிக்கி டையே இருந்த இடைவெளி குறையும். தாய், தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. குடும்ப வருமானம் உயரும். பிள்ளைகள் உங்களது வார்த்தை களை மதித்து நடப்பார்கள்.

பெண்களுக்கு: எந்த சூழ்நிலையிலும் நிதானமாக யோசித்து எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பயணம் செல்ல நேரலாம்.
மாணவர்களுக்கு: கல்வி தொடர்பாக எடுக்கும் முடிவுகளில் அவசரம் காட்டாமல் நிதானமாக செயல்படுவது நன்மை தரும்.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: வியாழக்கிழமையில் குரு பகவானை முல்லை மலர் சாற்றி வழிபட தடைப்பட்ட பணம் வந்து சேரும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.

| |

மற்றவை :