Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
நாடோடிகள் படத்திற்கு பாராட்டு
 
.
Sunday, 21 June, 2009 02:42 PM
.
சமுத்திரகனி இயக்கத்தில் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் உருவான நாடோடிகள் திரைப்படம் 26ம் தேதி வெளியாகிறது.
இந்த படத்தில் சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் புகழ் பெற்ற  இயக்குனர் சசிகுமார், அனன்யா, அபிநயா, விஜய், கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 4 நண்பர்களின் கதை இது என்கிறார் இயக்குனர் சமுத்திரகனி. இந்த படத்தில் நடித்துள்ள அபிநயா, காது கேளாத, வாய் பேச முடியாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. படம் வெளியான பிறகு அவரை பற்றி பலரும் பேசுவார்கள் என்கிறார் சமுத்திரகனி.
.
இந்த படத்தை பார்த்து சென்சார் அதிகாரிகள் பாராட்டியுள்ளனராம். படம் உணர்வுபூர்வமாக இருப்பதாகவும், நல்ல செய்தியை தெரிவிப்பதாகவும் கருதி அதிகாரிகள் பாராட்டி உள்ளனர். படத்திற்கு சுந்தர் சி.பாபு இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  வாலி, ந.முத்துகுமார், கபிலன் மற்றும் யுகபாரதி பாடல்களை எழுதியுள்ளனர். குளோபல் இன்போ டைமண்ட் இந்தபடத்தை தயாரித் துள்ளது.
| |

மற்றவை :