Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
சூர்யா-நயன்தாரா நடனம்
 
.
Sunday, 21 June, 2009 10:19 AM
.
ஏனோ ஏனோ பனித்துளி என துவங்கும் தாமரை எழுதிய பாடலை பெயரிலேயே பனியை கொண்ட ஐஸ்லாந்தில் படமாக்குவதற்காக ஆதவன் படத்தின் குழு அந்நாட்டிற்கு சென்றுள்ளது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யாநயன்தாரா நடிக்கும் இந்தப் படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சரோஜாதேவி நடித்துள்ளார்.
.
வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்க,முரளி, ரமேஷ்கன்னா, சாயாஜி ஷிண்டே, ஆனந்த்பாபு உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி பின்னர் டார்ஜிலிங், கொடைக்கானல் ஆகிய இடங்களில் நடைபெற்றது.

இதை தொடர்ந்து தற்போது ஐஸ்லாந்தில் அசத்தலான பாடல் காட்சி படமாக்குவதற்காக சூர்யா நயன்தாரா மற்றும் படப்பிடிப்பு குழுவினர் அந்நாட்டிற்கு சென்றுள்ளனர்.

ஜேம்ஸ்பாண்டு நடித்த பல படங்கள் இன்று படமாக்கப்பட் டுள்ளது. தென்னிந்தியா விலிருந்து படப்பிடிப்பு நடத்தப் படுவது இதுவே முதல் முறை.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத் துள்ளார். குருவி படத்தை தொடர்ந்து ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிரம்மாண்ட மாக தயாரிக்கும் படம் ஆதவன்.
| |

மற்றவை :