Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
அம்பாசமுத்திர அம்பானி
 
.
Sunday, 21 June, 2009 10:02 AM
.
 திண்டுக்கல் சாரதி படத்தை தொடர்ந்து கருணாஸ் மீண்டும் நாயகனாக நடிக்கும் படம் அம்பாசமுத்திரம் அம்பானி. ஜே.பி.மீடியா என்டர்டென்மெண்ட் சார்பில் ஜான் பிரிட்டோ தயாரிக்கும் இந்தப் படத்தில் கருணாசுக்கு ஜோடியாக "அரசாங்கம்' படத்தில் நாயகியாக நடித்த நவநீத் கவுர் நடிக்கிறார். ராஜாதி ராஜா படத்திற்கு இசையமைத்த கருணாஸ், இந்தப் படத்திற்கும் இசையமைத்திருக்கிறார்.
.
பாடல்களை வைரமுத்து எழுதுகிறார். திண்டுக்கல் சாரதி படத்திற்கு வசனம் எழுதிய ராம்நாத் படத்தை இயக்குகிறார்.
நகைச்சுவை படமென்றாலும், இதன் கதை கொஞ்சம் சீரியசானது. அம்பா சமுத்திரத்தில் பிறந்த ஒரு ஏழை இளைஞன் உலகமே வியக்கும் அளவுக்கு பணக்காரன் ஆக வேண்டும் எனும் லட்சியத்தோடு சென்னைக்கு வருகிறான்.

அவனது லட்சியம் நிறைவேறு கிறதா என்பதே படம் விவரிக்கிறது. இந்த படத்தின் ஷýட்டிங் தொடங்கி ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. கோட்டா சீனிவாசராவ், ஆர்.சுந்தர் ராஜன், மயில்சாமி, ஹனிபா, ஊர்வசி, நிரோஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
| |

மற்றவை :