Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
ராசி: 14.6.09 முதல் 20.6.09 வரை
 
.
Monday, 15 June, 2009 09:47 AM
.

மேஷம் (அஸ்வினி, பரணி,  கார்த்திகை 1ம் பாதம்)

தலைமை தாங்கி துணிச்சலுடன்  எதையும் செய்யும் ஆற்றல் பெற்ற மேஷ ராசியினரே இந்தவாரம் செலவு கூடும். சந்திரன் சஞ்சாரம் வார மத்தியில் ராசியில்  சஞ்சாரம் செய்வது சாதகமான பலன் தரும்.  உடல் ஆரோக்கியம் உண்டாகும். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். ராசியாதிபதி செவ்வாய் சஞ்சாரம் தொடர்ந்து ராசியில் இருப்பதால்  வாகனங் களில்  செல்லும் போதும் ஆயுதங்களை கையாளும் போதும் கூடுதல் கவனம் தேவை.  சூரியன் சஞ்சாரத்தால்  முன் கோபம் ஏற்பட்டு அதனால் வீண்தகராறு ஏற்பட லாம். நிதானமாக செயல்படுவது நல்லது.

தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற மிகவும்  கவனமாக  இருப்பது நல்லது. செலவை  குறைப்பதன் மூலம் பண தட்டுப் பாடு குறையலாம். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி புரியும் இடங்களில் எச்சரிக்கை யுடன்  இருப்பது நல்லது. குறிப்பாக எந்திரங் களை இயக்கும் போது கவனம் தேவை.

குடும்பத்தில் குதூகலமான சுப பலன்கள் ஏற்படும். கணவன், மனைவிக் கிடையே பந்தபாசம் அதிகரிக்கும். குழந்தைகளின் மூலம் மனமகிழும் படியான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறவினர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது.
பெண்களுக்கு: மனதில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். முன்கோபத்தை குறைப்பது நன்மையை தரும். 

மாணவர்களுக்கு: மற்றவர்களுடன் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. கல்வி பற்றிய மனக்கவலை ஏற்பட்டு விலகும். 

சந்திராஷ்டமம்: இல்லை

பரிகாரம்: திருப்பரங்குன்றம் முருகனை வணங்க குடும்பத்தில் இருக்கும் பிரச்சனை தீரும். காரியவெற்றி உண்டாகும்.

.

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம்,  ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)
எந்த விவகாரத்தில் சிக்கினாலும் சாமர்த்தி யமாக மற்றவரை முன் நிறுத்திதான்  தப்பித்துக் கொள்ளும் ஆற்றல் பெற்ற ரிஷபராசியினரே இந்த வாரம் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேரலாம். சந்திரன் சஞ்சாரம் வார தொடக்கத்திலும், இறுதியிலும் நல்ல பலன்களையே தரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும். சாதூர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். வார தொடக்கத்தில் ராசியில் சூரியன் சஞ்சாரம் செய்வதும், திடீர் உடல்நலக்கோளாறை ஏற்படுத்தும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். வியாபாரம் தொடர் பான பயணங்கள் செல்ல நேரலாம். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத் தில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள்.   உத்தியோ கம் தொடர்பான இடமாற்றம் ஏற்படலாம்.

குடும்பத்தில் இருப்பவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து  செல்வது நல்லது. குழந்தைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள்.  

பெண்களுக்கு: சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரலாம்.
மாணவர்களுக்கு: மற்றவர்களை திருப்தியடையச் செய்யும் வகையில் உங்களது செயல்கள் இருக்கும். கல்வியில் ஆர்வம் உண்டாகும்.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்:  மேல் மருவத்தூர் ஆதிபரா சக்தியை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மனநிம்மதி கிடைக்கும். 

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்  திருவாதிரை,  புனர்பூசம் 1, 2, 3 பாதம்)
காரியம் சாதிக்க பலவகையான யோச னைகளையும் தந்திரங்களையும் கையாள் வதில் கெட்டிக்காரர்களான மிதுன ராசியி னரே இந்த வாரம் காரிய அனுகூலம்  ஏற்படும். சந்திரன் சஞ்சாரம்  மூலம் வார தொடக்கத்தில்  முக்கிய நபர் களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை  அதிகரிக் கும். விடா முயற்சியுடன் ஈடு பட்டு  காரி யங்களில் வெற்றி பெறுவீர்கள். விருப்பங் கள்  கைகூடும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை. வீண் பகை ஏற்படலாம். ராசியாதி பதி புதன் ராசிக்கு 12ல் இருப்பதால் மற்றவர்களுக் காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம்.

தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதை யில் செல்லும் அரசாங்கம் தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப் படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு பொறுப்புகள் கூடும். திறமை வெளிப் படும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.

குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற வர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். கணவன் மனைவிக் கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர் கள். விருந்தினர்கள் வருகை இருக்கும். மரியாதையும் அந்தஸ்தும் கூடும்.

பெண்களுக்கு: விடா முயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து திருப்திதரும்.
மாணவர்களுக்கு: கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். எதிலும் முழு முயற்சியு டன் ஈடுபடுவீர்கள்.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: மதுரை கூடலழகரை வணங்கி வர துன்பங்கள் விலகி இன்பங்கள் தேடி வரும்.

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
எவரையும் கண்டு அஞ்சாமல் மனம் போன போக்கில் காரியங்களை செய்யும் கடக ராசியினரே இந்த வாரம் புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மன திருப்தியடை வீர்கள். ராசியாதிபதி சந்திரன் சங்சாரம் மூலம் இந்த வாரம் எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங் கள் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனகுழப்பம் நீங்கும். வாரத்தொடக்கத்தில் சூதியன் சஞ்சாரம்  பணவரத்தை அதிகப்படுத்தும்.

தொழில் வியாபாரத்தில் நீண்ட நாட்க ளாக இருந்து வந்த பிரச்சனை தீரும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில் இருந்த தொய்வு நீங்கும். உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு புதியபதவிகள் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து ஆகி யவை உயரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட் டங்கள் இருக்கும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக் கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் கூடும். உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம்.

பெண்களுக்கு
: திறமை வெளிப்படும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். மனதில் தைரியம் உண்டாகும்.
மாணவர்களுக்கு: மனதில் இருந்த வீண் பயம் அகலும். கல்வியில் வெற்றி பெற பாடுபடுவீர்கள்.
சந்திராஷ்டமம்: 14.6.2009 மற்றும் 15.6.2009 இரவு 10.30 மணி வரை சந்தி ராஷ்டமம் இருப்பதால் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.
பரிகாரம்: காசி விசாலாட்சியை வணங்கி வர குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீண்ட நாள் பிரச்சனை தீரும்.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் 1ம் பாதம்)
என் வழி தனி வழி என்று செயல்படும் சிம்மராசியினரே நீங்கள் எதிர்ப்பவர்களை தக்க சமயத்தில் வெற்றி கொள்வீர்கள்.  இந்த வாரம் பணவரத்து அதிகரிக்கும். சந்திரன் சஞ்சாரம் எதிர்பாராத நல்ல திருப்பங்களை ஏற்படுத்தும். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து முன்னேறிச் செல் வீர்கள். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதக மாக நடந்து முடியும். சூரியன் சஞ்சாரம் ராசிக்கு 11ல் இருப்பதால் சாதகமான பலன்கள் உண்டாகும். மற்றவர்கள் பாராட்டக் கூடிய மிகப்பெரிய செயலை செய்து முடிப்பீர்கள்.

தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். முக்கிய நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோ கத்தில் இருப்பவர்களின் பணம் சம்பாதிக் கும் திறமை அதிகரிக்கும். மேல் அதிகாரி கள் கொடுத்த வேலையை திறமையுடன் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.

குடும்பத்தில் இருந்த டென்ஷன் நீங்கும் கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளின் எதிர் காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்க ளால் தேவையான உதவி கிடைக்கும்.
பெண்களுக்கு: எந்த தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். மனதில் மகிழ்சி உண்டாகும்.
மாணவர்களுக்கு: கல்வியில் முன்னேற் றம் உண்டாகும். எதிர்ப்புகளை சாமர்த்திய மாக சமாளிப்பீர்கள்.
சந்திராஷ்டமம்: 15.6.2009 இரவு 10.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்கி 18.6.2009 காலை 5.45 மணி வரை இருப்பதால் வீண் அலைச்சல், தடைதாம தம் சந்திக்க வேண்டி இருக்கும். எதிலும் கவனம் தேவை.
பரிகாரம்: கோயம்பேடு குறுங்காலீஸ்வ ரரை ஞாயிற்றுக்கிழமையில் வில்வ அர்ச்சனை செய்து வணங்க எல்லா தொல்லைகளும் நீங்கும். எதிர்பார்த்த காரியம் நன்றாக நடக்கும்.

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)
எளிதில்  யாரையும் நம்பாத கன்னி ராசியினரே நீங்கள் ஊக்கமுடன் உழைக்க தயங்காதவர்கள் இந்த வாரம் எதிலும் கவனமாக இருப்பது நன்மை தரும். சந்திரன் சஞ்சாரம் வார தொடக்கத்தில் பணம் வரத்தை அதிகப்படுத்தும். பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். வார மத்தியிலும் இறுதியிலும் புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். சூரியன் ராசியாதிபதி புதன் இருவரும் வார தொடக்கத்தில் நேற்று ராசிக்கு 9ல் இருப்பதால் தந்தையுடன் அனுசரித்து செல்வது நல்லது.

பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப் படும். வார மத்தியில் சூரியன் சங்சாரம் 10ல் இருப்பதால் நன்மையை தரும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெற கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுத லாக உழைக்க வேண்டி இருக்கும். முயற்சி கள் எதிர்பார்த்த பலன் தராமல் போக லாம். வீண் அலைச்சல் உண்டாகலாம்.

குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை ஆலோசனை செய்யாமல் தானாக எதையும் செய்வது உங்களுக்கு மன வருத்தத்தை தரலாம். கணவன், மனைவிக் கிடையே  வீண் வாக்கு வாதங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது.

பெண்களுக்கு: எதிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நன்மையை தரும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.
மாணவர்களுக்கு: கல்வியில் வெற்றி பெற அதிக ஈடுபாட்டுடன் படிப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம்.
சந்திராஷ்டமம்: 18.6.2009 காலை 5.45 மணி முதல் 20.6.2009 காலை 10.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளை தள்ளி போடுவதுடன் எதிலும் கூடுதல் கவனத்தை செலுத்துவது நல்லது.
பரிகாரம்: புதன் கிழமையில் திருவல்லிக் கேணி பார்த்தசாரதி பெருமாளை வணங்க மனதில் இருந்த குழப்பம் நீங்கி நிம்மதி உண்டாகும். கடன் பிரச்சனை தீரும்.

துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)
நியாயமும் நேர்மையும் நிர்வாக திறனும் கொண்டு துளாராசியினரே நீங்கள் அவசரப்படாமல்  நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும். சந்திரன் சஞ்சாரத்தால் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.

புதிய நபர்களின் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். சூரியன் சஞ்சாரம் வார தொடக்கத்தில் ராசிக்கு 8ல் இருப்பது உடல் நல பாதிப்பு ஏற்படலாம். ஏற்கனவே செய்த ஒரு செயலை நினைத்து வருந்த நேரிடும். பயணங்கள் செல்ல நேரிடலாம். வார மத்தியில் 9ல் சஞ்சரிப்பதால் தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை.

தொழில் வியாபாரம் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரம் தொடர்பானவழக்கு விவகாரங் களை தள்ளி போடுவது நல்லது. எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் பண தேவை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் உங்களுக்கு உறுதுணை யாக இருப்பார்கள்.

குடும்பத்தில் ஏதாவது வீண் விவகாரங்கள் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக் கிடையே திடீர் கருத்து வேற்றுமை உண்டாக லாம். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். பிள்ளை களுக்காக கூடுதலாக பாடுபட வேண்டி இருக்கும். சகோதரர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.

பெண்களுக்கு: பணவரத்து கூடும். ஏற்கனவே செய்த ஒரு காரியத்தின் பலன் இப்போது கிடைக்கும். திடீர் மனவருத்தம் ஏற்படலாம்.
மாணவர்களுக்கு: எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்ல பலன் தரும்.
சந்திராஷ்டமம்: 20.6.2009 காலை 10.30 மணி முதல்  அன்று முழுவதும் சந்திராஷ் டமம் இருப்பதனால் வீண் அலைச்சல் காரிய தாமதம் உண்டாகலாம்.
பரிகாரம்: கோபூஜை செய்து பசுவை வணங்க குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபிட்சம் உண்டாகும்.

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
அனாவசிய செலவுகளை நீக்கி அத்யாவசிய செலவுகளை மட்டுமே செய்யும் விருச்சிக ராசியினரே இந்த வாரம் வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். சந்திரன் சஞ்சாரம் வார மத்தியில் சாதகமான பலன் தரும். விரும்பியது கிடைக்கும். அதே நேரத்தில் அதற்கான கூடுதலாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். மனதில் ஏதாவது ஒரு கவலை இருக்கும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத் தில் கவனம் தேவை. சூரியன் சஞ்சாரம் புதன் சஞ்சாரம் 7ல் இருப்பது வார தொடக் கத்தில் வீண் செலவு ஏற்படுத்தும்.

தொழில் வியாபாரத்தில் லாபம் குறை யும். பணவரத்து சீராக இருக்கும். ஆர்டர் கள் வருவது தாமதப்படும். வாடிக்கை யாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. போட்டிகள் குறையும். உத்தி யோகத்தில்  இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். சக ஊழியர்களிடம் இருந்த மன வருத்தங்கள் நீங்கும். மேல் அதிகாரிகள் சொன்ன வேலையை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு செயல்பட வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள், நண்பர்கள் மூலம் கிடைக்கும் உதவி தாமதப்படும்.

பெண்களுக்கு: கூடுதலாக செய்யும் முயற்சிகள் மூலம் விரும்பியபடி காரியத்தை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மாணவர்களுக்கு:  எதிலும் எச்சரிக்கையு டன் ஈடுபடுவது நல்லது. கல்வியில் வெற்றிபெற கூடுதல் கவனம் தேவை.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: திருச்செந்தூர் செந்தில் ஆண்டவனை வணங்க எதிர்ப்புகள் நீங்கும். கஷ்டங்கள் குறையும்.

தனுசு (மூலம், பூராடம்,  உத்திராடம் 1ம் பாதம்)
நேரத்திற்கேற்றார் போல் வளைந்து கொடுத்து காரியம் சாதிக்கும் திறமை பெற்ற தனுசு ராசியினரே இந்த வாரம் கடினமான பணிகளையும் எளிதாக செய்து முடிக்கும் சூழ்நிலை உண்டாகும். சந்திரன் சஞ்சாரம் வார இறுதியில் பணவரத்தை தரும். வார தொடக்கத்தில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வார மத்தியில் வீண் செலவுகள் உண்டா கும். வார தொடக்கத்தில் சூரியன் சஞ்சாரம்  ராசிக்கு 6ல் இருப்பதால் எதிர்ப்புகள் நீங்கி காரிய அனுகூலம் உண்டாகும். நீண்ட தூர பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் இருப்பவர் களுக்கு பழைய பாக்கிகள் வசூலாக நிதிநிலை உயரும். கடன் பிரச்சனைகள் குறையும். தொழில் போட்டிகள் விலகும். வேலை தேடுபவர்களுக்கு உத்தியோகம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு மறைமுகமான எதிர்ப்புகள் விலகும்.

குடும்பத்தில் இருந்த கஷ்டங்கள் நீங்கும். குதூகலம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். தொல்லைகள் நீங்கும்.

பெண்களுக்கு: எதையும் எளிதாக செய்து முடிக்கும் திறமை உண்டாகும். பயணங்கள் வெற்றியை தரும்.
மாணவர்களுக்கு: கல்வியில் இருந்த போட்டிகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றிக்கு கூடுதல் முயற்சி பலன் அளிக்கும்.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: குருபகவானை வியாழக் கிழமைகளில் வணங்க எல்லா கஷ்டங் களும் நீங்கி சுகம் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி கிடைக்கும்.

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம்,  திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)
பகையை மனதில் வைத்து எதிரியை தகுந்த நேரம் பார்த்து வெற்றி கொள்வ தில் சாமர்த்தியம் மிகுந்த மகர ராசியினரே இந்த வாரம் மனதில் புதிய உற்சாகம் உண்டாகும். சந்திரன் சஞ்சாரம் தன்னம் பிக்கையை அதிகரிக்க செய்யும். முயற்சி களில் சாதகமான பலன் கிடைக்கும். பண வரத்து எதிர்பார்த்தபடி வரும். வார மத்தி யில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வார தொடக்கத்தில் சூரியன் சஞ்சாரத்தால் கெட்ட கனவுகள் தோன்ற லாம். நட்பாக இருந்தவர்கள் பிரிந்து செல்லலாம். வார மத்தியில் சூரியன் சஞ்சாரம் நல்ல பலன்களை தரும்.

தொழில் வியாபாரம் வழக்கம்போல் நடக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர் கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும். பிள்ளைகளுக்காக சில பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். அவர்களை அன்புடன் நடத்துவது நல்லது.
பெண்களுக்கு: நீங்கள் எடுக்கும் முயற்சி களில் சாதகமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரத்து திருப்தி தரும்.

மாணவர்களுக்கு:  கல்வி தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த பலன் கிடைக் கும். மனதில் இருந்த கவலை நீங்கும்.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: ஆஞ்சநேயரை வியாழக் கிழமையில் வெற்றிலை மாலை போட்டு வணங்க எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். மனதில் தைரியம் கூடும்.பரிகாரம்: குருபகவானை வியாழக் கிழமைகளில் வணங்க எல்லா கஷ்டங் களும் நீங்கி சுகம் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி கிடைக்கும்.

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)
தீர்க்கமான சிந்தனையும் தெளிவான முடிவெடுக்கும் திறமையும் கொண்ட கும்ப ராசியினரே இந்த வாரம் சந்திரன் சஞ்சாரத்தால் வார மத்தியில் எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். வார தொடக்கத்தில் வீண் கவலை ஏற்படும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வார தொடக்கத்தில் சூரியன் சஞ்சாரம் ராசிக்கு 4ல் இருப்பதால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் ஏற்படும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. வார மத்தியில் 5க்கு வருவதால் பூர்வீக சொத்துக்களில் வரும் வருமானம் குறையலாம்.

தொழில் வியாபாரம் மந்தமாக இருந் தாலும் பணவரத்து திருப்தி தரும். கடன் களை அடைப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு மேல் அதிகாரிகள் திருப்தியடைவார்கள்.

குடும்பத்தில் இருந்த இறுக்கமான நிலை மாறும். கணவன், மனைவிக் கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத் தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவ மாக பேசுவது நன்மை தரும்.

பெண்களுக்கு: எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங் களை தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை.
மாணவர்களுக்கு: கல்வியில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது நடவடிக்கைகள் பெற்றோருக்கு திருப்தியை தரும்.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: சனிக்கிழமையில் சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வணங்க உடல் ஆரோக்கியம் பெறும். கடன் பிரச்சனை தீரும்.

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
கல்வியறிவும் அனுபவ அறிவும் பெற்றிருந்தாலும் கூடவே கூச்ச சுபாவம் கொண்ட மீன ராசியினரே இந்த வாரம் வாக்கு வன்மையால் எல்லா நன்மைக ளும் கிடைக்க பெறுவீர்கள். சந்திரன் சஞ்சாரம் வார தொடக்கத்தில் அனுகூல மான பலன்களை தரும். பணவரவு மன திருப்தியை தரும். வார இறுதியில் புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள்.

வார ஆரம்பத்தில் சூரியன் சஞ்சாரம்  ராசிக்கு 3ல் இருப்பதால் நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும்.  வார மத்தியில் 4ல் சஞ்சரிப்பதால் வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரததில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்க படட சிரமங்கள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு குறைந்து காணப்படுவார்கள். எதிர்பார்த்த இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம்.

குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் மூலம் இருந்த மன வருத்தம் நீங்கி அவர்களுடன் சந் தோஷமாக வெளியே சென்று வருவீர்கள்.
பெண்களுக்கு: எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மன கவலை நீங்கி நிம்மதி உண்டாகும்.
மாணவர்களுக்கு: கல்வியில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படு வீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: ஸ்ரீராகவேந்திரரை வணங்கி வர எல்லா காரியங்களும் நல்ல படியாக நடக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும்.

| |

மற்றவை :