டிரீம் வேலி சார்பில் ரவீந்திரன் தயாரித்திருக்கும் இந்த படத்தில் பார்த்திபன், கார்த்தி, ரீமாசென், ஆன்டிரியா, பிரதாப் போத்தன் என நட்சத்திர பட்டாளமே உள்ளன. நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த இந்த படம் பற்றி சமீபத்தில் செல்வராகவனே சுவையான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

படத்தில் ஹீரோ யார்? வில்லன் யார்? பார்த்திபன் வேடம் என்ன? போன்றவையெல்லாம் புதிராகவே இருக்கிறது.
7ஆம் நூற்றாண்டை நோக்கி நடக்கும் கதையில் பார்த்திபன் மன்னராக வருவதாக ஒரு தகவல். கார்த்தி, அகழ்வாராய்ச்சி நிபுணராக வருகிறாராம்.
படத்தில் அவருக்கு ஜோடி இல்லை என்ற போதும், கட்டிப் பிடிக்கும் காட்சிகள் இருக்கிறதாம். திட்டமிட்டதை விட அதிக செலவு மற்றும் அதிக நாட்கள் தேவைப்பட்ட நிலையிலும் கதையின் பிரம்மாண்டத்தை புரிந்து ஒத்துழைத்த தயாரிப்பாளரே "ஆயிரத்தில் ஒருவன்' என்கிறார் செல்வராகவன்.
முதல் முறையாக அவரது படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். பாடல்கள் இன்று மாலை பிரம்மாண்டமான விழாவில் வெளியிடப்படுகின்றன.