இவர் "கண்டநாள் முதல்' படத்தின் இயக்குனரான ப்ரியாவிடம் இயக்குனராக பணியாற்றியவர். குறும்படத்திற்காக மாநில விருதும் பெற்றிருக்கிறார். "திருதிரு துறுதுறு' படத்தை சத்யம் சினிமாஸ் மற்றும் ரியல் இமேஜ் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தில் அஞ்சாதே அஜ்மல் நாயகனாகவும், ரூபா என்னும் புதுமுகம் நாயகியாகவும் நடித்துள்ளனர்.

இதுவரை சீரியசான வேடங்களிலேயே வந்துள்ள அஜ்மலுக்கு இதில் செமஜாலியான வேடமாம். அதுமட்டுமல்ல இந்த படத்தில் முதல் முறையாக சோலோ ஹீரோவாக நடிக்கிறாராம். அதோடு தனது டப்பிங்கை தானே பேசியிருக்கிறாராம்.
புதுமுகம் ரூபா, இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததன் மூலம் ஏதோ கனவு நிறைவேறியது போல இருக்கிறது என மகிழ்ச்சியோடு சொல்கிறார். படம் பெருமளவு முடிந்து விரைவில் திரைக்கு வர தயாராக உள்ளது.