ஆறுமுகம் படம் தனக்கு பெரிய திருப்புமனையாக அமையும் என்று பரத் உற்சாகத்தோடு இருக்கிறார். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. கூல் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குபவர் சுரேஷ் கிருஷ்ணா. ரஜினியை வைத்து மெகா ஹிட் படங்களை கொடுத்துள்ள சுரேஷ் கிருஷ்ணா இயக்கும் இந்த படத்திற்கு தேவா இசை அமைத்துள்ளார்.
அண்ணாமலை, பாட்ஷா உள்ளிட்ட படங்களில் வெற்றிக்கூட்டணியாக அமைந்த இவர்களின் கூட்டணியில் பரத் நடிக்கிறார்.