Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
ராசி: 7.6.09 முதல் 13.6.09
 
.
Saturday, 06 June, 2009 04:01 PM
.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

நயமான வார்த்தைகள் பேசி பலரது நன்மதிப்பையும் பெறும் மேஷ ராசியி னரே இந்த வாரம் ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். ராசியாதிபதி செவ்வாய் ராசிக்குள் இருப்ப தால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். ராசிக்கு இரண்டில் சஞ்சாரம் செய்யும் புதன் வீண் செலவை ஏற்படுத்து வார். அடுத்தவர்களுக்கு உதவ போய் வீண் பழி ஏற்படலாம் கவனம் தேவை.
.
தொழில் வியாபாரம் தொடர்பான அலைச் சல் அதிகரிக்கும். ஆனால் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாடிக்கையா ளர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப் பது நன்மை தரும். உத்தியோகத்தில் கூடுதல் பணிச் சுமையை ஏற்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகளிடம் உங்களது கருத்துக்களை தெரிவிக்கும்போது கவனமாக பேசுவது நல்லது.

குடும்பத்தில் நிம்மதி குறையலாம். கணவன்மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளை கள் விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும்.
பெண்களுக்கு: சமையல் செய்யும் போது கவனம் தேவை. மற்றவர்களுக்கு   உதவப்போய் வீண் பிரச்சனை உண்டாக லாம். கவனம் தேவை.

மாணவர்களுக்கு: கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக செல்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 7.6.2009 மற்றும் 8.6.2009 பகல் 2 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல், தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது.

பரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய், வெள்ளிக்கிழமையில் பூஜித்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மன துயரம் நீங்கும்.

ரிஷபம்
(கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

எண்ணியதை செயல்படுத்த எதையும் செய்ய தயங்காத ரிஷப ராசியினரே இந்த வாரம் சிற்றின்ப செலவு அதிகரிக்கும். ராசியில் சூரியன் சஞ்சாரம் புதனுடன் சேர்ந்து இருப்பதால் மனதில் ஏதாவது கலக்கம் ஏற்படும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். ஒதுங்கி சென்றாலும் வலிய வந்து சிலர் சண்டை போடலாம் கவனமாக இருப்பது நல்லது. கண் நோய் ஏற்படலாம். வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம்.

தொழில் வியாபாரத்தில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகளை பேசுவதை தவிர்ப்பது நல்லது. வாடிக்கை யாளர்கள் மன நிறைவடைவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். வேலை செய்யும் இடத்திலும் மேல் அதிகாரிகளிடமும் வீண் பேச்சுக் களை தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தில் ஏதாவது வேண்டாத பிரச்சனை தலை தூக்கலாம். உறவினர் கள் நண்பர்கள் பிள்ளைகள் என்று யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது.
பெண்களுக்கு: மனக்கவலை உண்டா கும். வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது.

மாணவர்களுக்கு: உடல் சோர்வு உண் டாகலாம். வீண் அலைச்சலை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.

சந்திராஷ்டமம்: 8.6.2009 பகல் 2 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்கி 10.6.2009 இரவு 1.40 மணி வரை இருப்பதால் புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. வீண் அலைச்சலும் காரிய தாமதமும் ஏற்படலாம். கவனம் தேவை.

பரிகாரம்:  கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி லட்சுமியை வழிபட கடன் பிரச்சனை தீரும். செல்வதில்லை உயரும்.

மிதுனம்
(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)


சுய கட்டுப்பாட்டுடன் இருக்கும் மிதுன ராசியினரே நீங்கள் தந்திரசாலி. இந்த வாரம் எதிலும் முன்னேற்றம் காணப் படும். எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். ராசிக்கு 12ல் சூரியன், புதன் சஞ்சாரம் செய்வ தால் உழைப்பு வீணாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம். அதே நேரத்தில் 11ல் சஞ்சரிக்கும் சுக்கிரன் மற்றும் செவ்வாயால் பொருள்  வரத்து அதிகரிக் கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். அதே நேரத்தில் பல தடை களை தாண்டி செயல்பட வேண்டி இருக் கும். எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத் தில் இருப்பவர்களின் செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.

குடும்பத்தில் இருந்த பிரச்சனை குறையும். கணவன், மனைவி இருவரும் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட் களை வாங்கி கொடுத்து திருப்தியடை வீர்கள். அடுத்தவர்களுக்காக  எந்த பொறுப் பையும் ஏற்காமல் இருப்பது நல்லது.

பெண்களுக்கு: வழக்கத்தை விட கூடுத லாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள் வரத்து கூடும். பயணம் செல்ல நேரலாம்.

மாணவர்களுக்கு: கல்வியில் வெற்றிபெற தடைகளை தாண்டி படிக்க வேண்டி இருக்கும். பெரியோரின் ஆலோசனை படி செயல்படுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 10.6.2009 இரவு 1.40 முதல் சந்திராஷ்டமம் தொடங்கி13.6.2009 பகல் 1.00 மணி வரை இருப்பதால் வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளி போடுவதும் நல்லது.

பரிகாரம்: காஞ்சி வரதராஜ பெருமாளை பூஜித்து வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும்.

கடகம்
(புனர் பூசம் 4ம் பாதம்,பூசம், ஆயில்யம்)


உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை கவரும் திறமை உடைய கடக ராசியினரே இந்த வாரம் எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணம் வரத்து கூடும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். ராசிக்கு 11ல் சூரியனும், புதனும் சஞ்சாரம் செய்வதால் நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும்.

தொழில் வியாபாரம் லாபகரமாக நடக் கும். வாக்கு வன்மையால் புதிய வாடிக்கை யாளர்கள் கிடைக்க பெறுவீர் கள். தடை பட்ட ஆர்டர்கள் வந்து சேரும். உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி புதிய பொறுப்புகள் ஏற்படலாம். மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை செய்து முடித்து அவர்களின் நன்மதிப்புக்கு ஆளாவீர்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சுபகாரியங் கள் கொண்டாட்டங்கள் இருக்கும். கணவன்மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்க பெறுவீர்கள். பெரி யோர் மூலம் அனுகூலம் உண்டாகும். ராசியில் கேது இருப்பதால் சகோதரர்களி டம் கவனமாக பேசுவது நல்லது.

பெண்களுக்கு: சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை செய்து முடிப்பீர் கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து திருப்திகரமாக இருக்கும்.

மாணவர்களுக்கு: புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மூலம் கல்வி யில் முன்னேற்றம் காண உதவி கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: 13.6.2009 பகல் 1 மணி முதல் தொடங்கி அன்று முழுவதும் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம்: மேல் மருவத்தூர் ஆதி பராசக்தியை பூஜித்து வணங்க துன்பங்கள் நீங்கும். காரிய வெற்றி கிடைக்கும்.

சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)


மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்வது போல் செயல்பட்டாலும் இறுதியில் நீங்கள் நினைத்ததையே செய்யும் குணமுடைய சிம்மராசியினரே இந்த வாரம் ராசியாதிபதி சூரியனின் சஞ் சாரம் ராசிக்கு 10ல் இருப்பதும் புதனு டன் சேர்ந்து இருப்பதும் பணம் சம்பாதிக் கும்  திறமையை அதிகப்படுத்தும். தடை பட்டு வந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக் கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் மூலம் நன்மை ஏற்படும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களிடம் நன் மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக சிறப்பாக பணிகளை செய்து மேல் அதிகாரிகளிடம் பாராட்டுக்கள் கிடைக்க பெறுவார்கள். உயர் பதவிகளும் கிடைக்க கூடும்.

குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரி யங்கள் நடக்கும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். கணவன், மனைவிக்கி டையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பிள்ளைகள் நீங்கள் கூறியதை கேட்டு அதன்படி நடப்பது ஆறுதலை தரும்.

பெண்களுக்கு: தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பணவரத்து அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு: கல்வியில் இருந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் காண்பீர் கள். பெற்றோர், ஆசிரியர் பாராட்டும் கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: இல்லை

பரிகாரம்: பிரதோஷ வேளையில் சிவனையும் நந்தீஸ்வரரையும் வணங்க எல்லா பிரச்சனை களும் சுமூகமாக முடியும். குடும்பத்தில் அமைதி ஏற்படும்.

கன்னி
(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)


அதிக நினைவுத்திறனும் எதையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் உடைய கன்னி ராசியினரே இந்த வாரம் வீண் முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. ராசியாதிபதி புதன் சூரியனுடன் சேர்த்து ராசிக்கு 9ல் சஞ்சாரம் செய்வதால் எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும்.

பணவரத்து தாமதப்படும். பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது.
தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் தாமதப்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் மெத்தனம் காணப்படும். எந்த ஒரு வேலையையும் அலைந்து செய்து முடிக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் பணியாற்றுவது நல்லது.  புதிய வேலைக்கு செய்யும் முயற்சிகள் பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்.

சுக்கிரன் சஞ்சாரம் குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலையை தரும். கணவன், மனைவிக் கிடையே இருந்த பிரச்சனைகள் குறையும். குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும்.

பெண்களுக்கு: எந்த ஒரு முடிவையும் எடுக்கும்போது ஒருமுறைக்குபலமுறை யோசிப்பதுநல்லது. மற்றவர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. 

மாணவர்களுக்கு: கல்வி தொடர்பான விஷயங்களில் முடிவு எடுக்கும் போது தீர ஆலோசித்து செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படலாம். 

சந்திராஷ்டமம்: இல்லை

பரிகாரம்: பகவத்கீதையை படித்து கண்ணனை வணங்கி வர எல்லா பிரச்சனை களும் தீரும். மன நிம்மதி உண்டாகும்.

துலாம்
(சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)


அற்ப சிந்தனைகளுக்கு இடம் கொடாமல் தீர்க்கமான எண்ணமுடைய துலாராசியினரே இந்த வாரம் எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். ராசிக்கு 8ல் புதனும், சூரியனும் சஞ்சாரம் செய்வதால் புத்திசாதூரியத்தால் எதையும் செய்து முடிக்க முடியும்.

அனுபவபூர்வமான அறிவுத்திறன் கை கொடுக்கும். பண வரத்து தாமதப்படும். மற்றவர்களுடன் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நன்மைதரும். ராசிக்கு 7ல் செவ்வாய் சுக்கிரன் சஞ்சாரம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய  முடிவுகள் எடுக்க நேரிடும்.  பணவரத்து தாமதப்படும். உத்தியோகத் தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது.  அடுத்தவ ரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்பு கள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும்.

குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலை தூக்கும். மிகவும் கவனமாக கையாண் டால் அது தீரும்.  கணவன், மனைவிக்கி டையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். பிள்ளைகள் உங்கள் ஆலோசனையை கேட்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கலாம். உறவினர்கள், நண்பர் களிடம் கவனமாக பழகுவது நல்லது.

பெண்களுக்கு: அனுபவபூர்வமான அறிவைக்கொண்டு எதையும் சாதிப்பீர் கள். வீண்வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும்.  

மாணவர்களுக்கு: கல்வியில் முன்னேற்ற மடைய தேவையான உதவிகள் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். 

சந்திராஷ்டமம்: இல்லை

பரிகாரம்: மாரியம்மனை வணங்கி வர எதிர்ப்புகள் விலகும். காரிய வெற்றி உண்டாகும். மனமகிழ்ச்சி கூடும். 

விருச்சிகம்
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

மற்றவர்களுக்காக போராடும் குணமுடைய விருச்சிக ராசியினரே நீங்கள் தன்னம்பிக்கை மிக்கவர். இந்த வாரம் காரியதடை தாமதம் நீங்கும்.  வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். ராசியாதிபதி செவ்வாய் சஞ்சாரம் சுக்கிரனு டன்  சேர்ந்து இருப்பதால் எதிர்ப்புகள் விலகும். பொருளாதாரம் உயரும். நினைத்த காரியத்தை  வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

வீண்கவலை விலகும். ராசிக்கு 7ல் புதன், சூரியன் சஞ்சாரம் இருப்பதால் அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னருடன் அனுசரித்து செல்வது நல்லது.  வியாபார போட்டிகள் குறையும். எல்லா துறைகளிலும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவார்கள். வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும்.

குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சிகள்  சாதகமான பலன் தரும். சிலருக்கு புத்திரபாக்கியம் உண்டா கும். வாய்க்கு ருசியான உணவு உண்பீர்கள். கணவன் மனைவி ஒருவரது பேச்சை மற்றவர் கேட்பதன் மூலம் நன்மை உண்டா கும். பிள்ளை களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பெண்களுக்கு: எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். தடைகள் விலகும். பணவரத்து திருப்திதரும்.

மாணவர்களுக்கு:  கல்வி பற்றிய கவலை விலகும். விளையாட்டு போட்டி களில் சாதகமான பலன் கிடைக்கும். விடுமுறை யில் மகிழ்ச்சியான பொழுது போக்கில் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம்: இல்லை

பரிகாரம்: குலதெய்வத்தை வணங்க எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

தனுசு
(மூலம், பூராடம்,  உத்திராடம் 1ம் பாதம்)


தடைகளை தகர்த்தெறிந்து முன்னேற்றம் காணும் திறமை உடைய தனுசு ராசியினரே இந்த வாரம் பலவகைகளிலும் நன்மை உண்டாகும். இழுபறியாக இருந்த சில வேலைகள் சாதகமாக நடந்து முடியும். சூரியன், புதனுடன் சேர்ந்து ராசிக்கு 6ல் சஞ்சாரம் செய்வதால் பணவரத்து அதிகரிக் கும். தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும்.

மரியாதை யும், அந்தஸ்தும் அதிகரிக்கும். கடினமான முயற்சிகள் கூட எளிமையாக செய்ய முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த பண தட்டுப்பாடு நீங்கும். வசூலாக வேண்டிய கடன்பாக்கிகள் வசூலாகும்.  வியாபாரம் தொடர்பான பயணங்களினால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை குறையும். வர வேண்டிய பணம் வந்து சேரும்.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை  காணப் படும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. அடுத்தவர் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டுவ தாக இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது.  பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்வது நல்லது.
பெண்களுக்கு: இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும்.  கவுரவம் உயரும். மற்றவர்களிடம் நன்மதிப்பு உண்டாகும்.

மாணவர்களுக்கு: கல்வியில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் காண்பீர் கள். மற்றவர்களுடன் இருந்த கருத்ஒது வேற்றுமை நீங்கும்.

சந்திராஷ்டமம்: இல்லை

பரிகாரம்: சுவாமிமலை முருகனை வணங்கிவர கஷ்டங்கள் தீரும். வாழ்க்கை யில் முன்னேற்றம் காண்பீர்கள்.

மகரம்
(உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)


எதைப்பற்றியும் கவலைப்படாமல் திடமானமுடிவுடன் எந்த வேலையையும் செய்து முடிக்கும் திறமை உடைய மகர ராசியினரே இந்த வாரம் ஏதேனும் வீண் கவலைகள் ஏற்படலாம். காரியங்களில் தாமதமான போக்கு காணப்படும். ராசிக்கு 5ல் சூரிய சேர்க்கை பெற்ற புதன் சஞ்சாரம் இருப்பதால் உங்கள் வார்த் தைக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு இருக்காது.

உங்கள் பேச்சு வெறும் பேச்சு போல் மற்றவர்கள் நினைப்பார்கள். அத னால் அளவுடன்  பேசுவது நல்லது. ராசிக்கு 4ல் செவ்வாயும் சுக்கிரனும் இருப்பதால் உங்களது உடமைகளை கவனமாக பார்த் துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

தொழில் வியாபாரத்தில் மெத்தனமான போக்கு காணப்படும். சரக்குகளை அனுப்பும் போதும் பாதுகாத்து வைக்கும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல் வது நல்லது. செய்யும் வேலை பற்றி மனதில் திருப்தியற்ற எண்ணம் உண்டாகும்.

குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்களுக்கு மனவருத்தத்தை தருவ தாக இருக்கலாம். கவனமாக கையாள்வது நல்லது.  பிள்ளைகளுடன் அனுசரித்து செல் வது நன்மையை தரும். கணவன், மனை விக்கிடையே திடீர் மனவருத்தம் அடையும் படியான சூழ்நிலை வரலாம் கவனம் தேவை.

பெண்களுக்கு: உங்களது பொருள்களை கவனமாக பாதுகாத்துக்கொள்வது நல்லது. வீண்பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவது நன்மைதரும்.

மாணவர்களுக்கு:  கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நன்மை தரும். கவன மாக அடுத்தவர்களிடம் பழகுவது நல்லது.

சந்திராஷ்டமம்: இல்லை

பரிகாரம்: சனி பகவானை சனிக்கிழமை யில் நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடு வது கவலையை போக்கும். வீண் அலைச் சல் குறையும். வேலைபளு நீங்கும்.

கும்பம்
(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)


புதிய இடங்களில் திறமைகளை வெளிப்படுத்த தயங்கும் குணமுடைய கும்பராசியினரே, இந்த வாரம் ராசியில் சஞ்சரிக்கும் ஜென்மகுருவால் விரும்பாத இடமாற்றம்  உண்டாகலாம். குறிக்கோள் இன்றி வீணாக அலைய நேரிடும். செலவும் அதிகரிக்கும்.

ராசிக்கு மூன்றில் செவ்வாய், சுக்கிரன் சஞ்சாரம் இருப்பதால் சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். மனோதைரியம் கூடும். புதிய நட்பு கிடைக்கும். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மைதரும். தொழில், வியாபாரத்தில்  எதிர்பாராத தடங்கல்கள் வரலாம்.

பணவரத்து இருந்தாலும் தேவை அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள்.  அவர்களால்  நன்மையும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வேகத்தில் பணிபுரிவார்கள்.  சிலருக்கு புதிய பதவி அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்க பெறு வார்கள். சிலருக்கு குடும்பத்தை விட்டு வெளியே சென்று தங்க நேரிடலாம். கணவன், மனைவிக் கிடையே மகிழ்ச்சி நீடிக்கும்.

விருந்தினர்கள் வருகை இருக் கும்.  வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.  திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். பிள்ளைகளுடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள்.

பெண்களுக்கு:  அடுத்தவர்களின் வேலைக்காக வீணாக  அலைய நேரிடும். மனோ தைரியம் அதிகரிக்கும். எதிலும் கூடுதல்  கவனத்துடன் செயல்படுவது நல்லது.

மாணவர்களுக்கு: கல்வியில் வெற்றி பெற முழுமூச்சாக பாடுபடுவீர்கள். புதிய நட்பு கிடைப்பதுடன் அவர்களது ஆலோசனையும் வெற்றிக்கு உதவும். ஆனால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

சந்திராஷ்டமம்: இல்லை

பரிகாரம்: திருப்பதி பெருமாளை தரிசித்து வணங்கி வர எதிர்பார்த்த காரிய அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சீர்படும்.

மீனம்
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)


புதுமையான சிந்தனைகளும், சிறந்த கற்பனையாற்றலும் உடைய மீன ராசியினரே, இந்த வாரம் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. ராசிக்கு இரண்டில் செவ்வாயும், சுக்கிரனும் சேர்ந்து சஞ்சாரம் செய்வதால் திடீரென்று கோபம் வரும். ஏதாவதுஒருவகையில் அடுத்தவரிடம் வீண்பேச்சு கேட்க நேரலாம் கவனம் தேவை. மற்றவர்கள் செய்கைகளால்  மனவருத்தம் உண்டாகலாம். ராசிக்கு மூன்றில் சூரியன் புதனுடன் சேர்ந்து சஞ்சாரம் செய்வதால் நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வரும்.

தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த  பின்தங்கிய நிலை மாறும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். வியாபார போட்டிகள் தடை தாமதங்கள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த் தியமாக செயல்பட்டு மேல் அதிகாரிக ளின் பாராட்டுகளை பெறுவார்கள்.  பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் உண்டாகும். சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள்.

குடும்பத்தில்  அமைதி குறைவது போல் தோன்றும் சகோதரர்கள் வழியில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கலாம் கவனம் தேவை.  பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். விருப்பமான நபரை சந்தித்து மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும்.

பெண்களுக்கு: வீண் பேச்சுக்களை குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது. பணவரத்து திருப்திதரும். கோபத்தை குறைப்பது நல்லது.

மாணவர்களுக்கு: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும்.

சந்திராஷ்டமம்: இல்லை

பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். மனகஷ்டம் தீரும்.
| |

மற்றவை :