Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
இளையராஜா பரபரப்பு பேச்சு
 
.
Friday, 22 May, 2009 03:10 PM
.
சென்னை, மே 22: நல்ல கதை அம்சம் கொண்ட புதுமுக இயக்குனர்கள் யார் வந்தாலும் இசையமைத்துத் தர தயார் என்று இசையமைப்பாளர் இளையராஜா பரபரப்பாக பேசியுள்ளார்.
.
சென்னை சத்யம் திரையரங்கில் இன்று நடைபெற்ற "வால்மீகி' படத்தின் ஆடியோ வெளியிட்டு நடைபெற்றது. இயக்குனர் சங்கர் முதல் சிடியை  வெளியிட, இயக்குனர் லிங்குசாமி பெற்றுக் கொண்டார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் ராமநாராயணன், வினியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி ஜி.சேகரன், திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர்  அபிராமி ராமநாதன், இசையமைப் பாளர் இளையராஜா, படத்தின் இயக்குனர் ஜி.அனந்த நாராயணன், பட தயாரிப்பாளர் ப.சீனிவாசன், பாடல் ஆசிரியர்கள் ப.விஜய், நா.முத்துக்குமார், யுகபாரதி, தாமரை உள்ளிட்ட ஏராளமான திரை உலகத்தினர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய இசையமைப்பாளர் இளையராஜா, சத்யம் திரையரங்கிற்கு தான் இப்போது தான் முதன் முதலாக வருவதாகவும், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு சத்யம் இருப்பதாகவும் கூறினார்.

பொதுவாக நான் விழாக்களில் கலந்து கொள்ளாததற்கு காரணம் உண்டு. தற்போது பல பொது விழாக்களில் கலந்து கொள்பவர்கள் மற்றவர்களை வசைபாடுவதிலேயே கவனத்தை செலுத்துகின்றனர். இதனால் பல சர்ச்சைகள் உருவா கின்றன.  எனவே தான் நான் பொது விழாக்களை தவிர்த்து விடுகிறேன்.

இப்போது கூட தினமும் 6 மணி நேரம் பிசியாக வேலை செய்து கொண்டிருக்கிறேன். நல்ல கதை அம்சத்துடன் வரும் புதுமுக இயக்குனர்களுக்கு இசையமைத்துத் தர தயாராக இருக்கிறேன். நான் புதுமுக இசையமைப்பாளராக இருந்த போது,  என்னை பஞ்சு அருணாச்சலம் அறிமுகப்படுத்தாமல் போயிருந்தால், இந்த இளையராஜா இப்படி இருந்திருக்க முடியாது.

எனவே தான், புதுமுக இயக்குனர் களை எப்போதும் நான் உதாசினப் படுத்துவதில்லை.  இந்த படத்திற்கு 5 பாடல்களை இசையமைத்து கொடுத்துள்ளேன். பாடல்கள் மிகவும் நன்றாக வந்துள்ளது.

இயக்குனர் மிஸ்கினின் "நந்தலாலா' படத்திற்கு இசையமைத்துக் கொடுத்தேன். ஆனால் அவர் இன்று வரை என்னை தொடர்பு கொள்ளவில்லை. அதற்காக நான் வறுத்தப்படவும் இல்லை. ஆனால் எங்களுக்குள் ஒத்த அலைவரிசை உள்ளது.  இவ்வாறு இளையராஜா பேசினார்.

விழாவில் பேசிய இயக்குனர் சங்கர், என்னுடைய உதவியாளராக இருந்த அனந்த நாராயணன் மிகவும் திறமைசாலி. அவருடைய ஆர்வத்திற்கு கிடைத்த இந்த படம் அவரை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும். படத்தின் பாடல்களை பார்த்தேன். மிகவும் நன்றாக வந்துள்ளது. நிச்சயம் இந்த படம் மக்களிடையே பேசப்படும். இயக்குனர் லிங்குசாமி உள்ளிட்டோரும் வாழ்த்தி பேசினர்.
| |

மற்றவை :