
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா தந்தையை மையமாக வைத்து எடுத்துவரும் அனிமேஷன் திரைப்படமான சுல்தான் தி வாரியர் வெகுவேகமாக வளர்ந்து வருகிறது. தன்னுடைய ஆக்கர் ஸ்டுடியோஸ் சார்பில் இந்த படத்தை எடுக்கும் சவுந்தர்யா, தந்தையின் ரசிகர்களை திருப்திபடுத்தும் அனைத்து அம்சங்களும் இதில் உண்டு என்கிறார். பஞ்ச் வசனங்கள் இல்லாமல் ரஜினி படமா என்ன? எனவேதான் இந்த படத்தில் ரஜினியின் டிரேட் மார்க்கான பஞ்ச் வசனங்களையும் இடம்பெற வைத்திருக்கிறாராம்.