Maalaisudar



 
 
 
 
 
 
 




.
வித்தியாசமான கதை ‘வர்ணம்’
 
.
Sunday, 17 May, 2009 10:54 AM
.
 வர்ணம் என்றதும் வண்ணமயமாகத் தான் நினைக்க தோன்றும். பெயருக்கு ஏற்ப வாழ்க்கையின் வண்ணமயமான இளமை பருவத்தை மையமாக கொண்டதுதான் வர்ணம் படத்தின் கதை. பல குறும்படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட எஸ்.எம்.ராஜு இயக்கும் இந்த படத்தில் மோனிகா, சம்பத், கிரி, அஷ்வதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
.
இளமைக் காலத்தில் ஏற்படும் இனிமையான அனுபவங்களுக்கு மத்தியில் சாதியின் ஆதிக்கம் பற்றி தெரிந்து கொள்ள நேரும்போது ஏற்படும் அதிர்வுகளையும் படம் விவரிக்கிறதாம். தமிழ்நாட்டையே அதிர வைத்த ஒரு சம்பவம் இந்த படத்தில் முக்கிய காட்சியாக வருகிறதாம்.

கொடைக்கானல் மற்றும் மூணாறு ஆகிய இடங்களில் படமாக்கப் பட்டுள்ள இந்த படத்திற்காக ஒரு முழு பாடலும் ஒரே ஷாட்டில் எடுத்து முடிக்கப்பட்டுள்ளதாம். ஒரு குறிப்பிட்ட பாடலில் முனியாண்டி எனும் சிறு தெய்வத்தின் கதை சொல்லப்படுகிறதாம்.

திருவிழா தொடர்பான பாடலுக்காக வீரபாண்டியில் நடைபெறும் நிஜ திருவிழாவை அப்படியே படமாக்கி இருக்கின்றனர்.
அல்கா பிலிம் கார்ப்பரேஷன் மற்றும் மீடியா சென் இணைந்து வழங்கும் இந்தபடத்திற்கு ஐசக் தாமஸ் கோட்காபள்ளி இசையமைத் திருக்கிறார்.
| |

மற்றவை :