Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
நிலவின் ஒளியில் ‘பௌர்ணமி நாகம்’
 
.
Sunday, 17 May, 2009 10:52 AM
.
 யார் கண்ணன் இயக்கத்தில் உருவாகும்  படம் ‘பௌர்ணமி நாகம்’. பெயருக்கு ஏற்ப சமீபத்தில் சித்ரா பௌர்ணமி அன்று படத்தின் ஷýட்டிங் தொடங்கி இருக்கிறது. மரக்காணம் அருகே உள்ள ஆலம்பரா கோட்டையில் மணற்பரப்பில் நிலவின் ஒளி மின்னும் பின்னணியில் ஷýட்டிங் விடிய விடிய நடந்திருக்கிறது.
.
நூற்றுக்கணக்கான பாம்பு புற்றுகள் மத்தியில் காட்சிகளை படமாக்கி உள்ளனர். மும்பை அழகி முமைத் கான், கருணாஸ், நிழல்கள் ரவி, டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் நடிக்க எஸ்.கே.ராஜ்குமார் இசை யமைக்கும் இந்தப் படத்திற்கான ஷýட்டிங் இரவு பகல் பாராமல் நடந்து கொண்டிருக்கிறதாம். ஜி. சாய்மகேஸ்வரா ரெட்டி வழங்கும் சவுண்ட் அண்டு கிளாப்ஸ் நிறுவனம் சார்பாக விஜயகுமார் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.
| |

மற்றவை :