Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
எனது ரீஎன்ட்ரி: விக்னேஷின் நம்பிக்கை
 
.
Sunday, 17 May, 2009 10:51 AM
.
 விக்னேஷை நினைவிருக்கிறதா? தொடர் தோல்விகளில் துவண்டு விடாமல் விக்னேஷ் ஈசா படத்திற்காக கடினமாக உழைத்து கொண்டிருக்கிறார். ஜெ.கே.கிரியேஷன்ஸ் சார்பில் பாலகணேசா இயக்கும் இந்தப் படம் தனக்கு திரையுலகில் ரீஎன்டரியாக அமையும் என்று விக்னேஷ் நம்பிக்கையோடு இருக்கிறார்.
.
இந்தப் படத்தின் கதையும் நன்றாக இருக்கிறது. படமாக்கப்பட்ட விதமும் திருப்தியாக இருக்கிறது என்று கூறும் விக்னேஷ், ஈசா வெளியானால் தனக்கு மிகப் பெரிய திருப்புமுனை ஏற்படும் என்ற உற்சாகத்திலும் இருக்கிறார். தூத்துக்குடியின் உப்பள பின்னணியில் நடக்கும் இந்த கதையில் சுடலீசன் எனும் வித்தியாசமான பாத்திரத்தில் அவர் நடித்திருக்கிறார்.

இந்தப் பாத்திரம் சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கிறார். கதைப்படி கருத்த உருவம் வேண்டுமென்பதால் தினந்தோறும் படப்பிடிப்புக்கு வெயிலில் நடையாய் நடந்திருக் கிறாராம்.' படத்தில், ஏரி ஒன்றின் மீது வாழை மட்டைகளில் கால் வைத்தபடி படமாக்கப்பட்டிருக்கும் சண்டை காட்சி மிகப் பெரிய ஹைலைட்டாக இருக்குமாம்.

அறிமுக இயக்குனராக பால கணேசா காட்சிகளை செதுக்கி இருக்கிறாராம். இந்த படம் துவங்கியதிலிருந்து ஏகப்பட்ட சோதனைகளையும், தடைகளையும் விக்னேஷ் சந்தித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் இந்தப் படத்தில் தன்னால் தொடர்ந்து நடிக்க முடியுமா என்ற நிலை இருந்ததாகவும், அதன் பிறகு தயாரிப்பாளராக வந்த ஜெய்கிருஷ்ணன் தன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து செலவை பார்க்காமல் படத்தை உருவாக்கியதாக நெகிழ்ச்சியோடு சொல்கிறார்.

தோற்றவன் ஜெயிக்கக் கூடாதா? என்ற உத்வேகத்தோடு தயாரிப்பாளர் தன்னை ஊக்குவித்ததாக கூறும் அவர், நிச்சயம் இந்த படம் ஜெயிக்கும் என்கிறார். ஈசாவில் நாயகியாக லக்ஷனா நடித்துள்ளார். யதார்த்தமான வேடத்தில் அசத்தியிருக்கிறாராம். ஹரண் எனும் புதுமுகம் இசையமைத்திருக்கிறார்.
| |

மற்றவை :