பார்த்திபன் இயக்கி நடிக்கும் வித்தகன் படத்தில் பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன் இயக்குனராக நடிக்கிறார். வெளிநாட்டிலிருந்து தனது குழுவை இயக்கும் அதிரடி தாதாவாக அவர் நடிக்கிறார். ஏற்கனவே பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் இவர் வில்லனாக நடித்திருப்பது நினைவிருக்கலாம். அதுமட்டுமல்ல லிங்குசாமியின் பையா படத்திலும் இவருக்கு முக்கிய வேடம் இருக்கிறதாம். அதுவும் வில்லனாகத்தானாம்.