அனைவரும் அஞ்சி நடுங்கும் வகையில் இறுக்கமானவனாக வாழ்ந்த முரட்டுத்தனமான மனிதன், பின்னர் திருந்தி வாழ நினைக்கும் போது ஊர் மக்கள் ஏற்றுக் கொள்கின்றனரா என்பதையே மாக்கான் படம் உணர்த்த உள்ளது.
செல்வனிடம் உதவியாளராக இருந்த என்.முரளிசாமி திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க உள்ளார். தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. நாயகன் செல்வனுக்கு ஜோடியாக கீர்த்தி சாவ்லா நடிக்கிறார். |