
மறைந்த இயக்குனர் ஜீவாவின் மனைவி அனீஸ் மும்பை இயக்குனரான விக்ரம் பட்டோடு இணைந்து தயாரிக்கும் படம் முத்திரை. ஜீவாவிடம் 12பி படத்தில் உதவியாளராக இருந்த ஸ்ரீநாத் தான் படத்தின் இயக்குனர். டேனியல் பாலாஜி, நிதின் சத்யா, லஷ்மிராய், பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.