Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
கோலிவுட் கார்னர்
 
.
Monday, 04 May, 2009 11:25 AM
.
இரட்டை வேடங்களில் ஜீவா
சிங்கம்-புலி. இதுதான் இளம் நாயகன் ஜீவா நடிக்கும் புதிய படத்தின் பெயர். பொதுவாக வித்தியாசமான வேடங்களிலேயே நடித்து வரும் ஜீவா நடிக்கும் படத்தின் பெயரும் வித்தியாசமாக அமைந்திருப்பது பொருத்தமானதுதான்.
இந்த படத்தில் ஜீவா முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக திவ்யா நடிக்கிறார். சில்வர்லைன் புரொடக்ஷன் தயாரிக்கும் இந்த படத்தை சாய்ரமணி இயக்குகிறார்.
பெயரே வித்தியாசமாக இருப்பதால் படமும் வித்தியாசமாகவே அமையும் என எதிர்பார்க்கலாம்.
.
ஐபிஎல்-ஐ காணச் சென்ற ஹீரோ
அலிபாபா படத்தில் அறிமுகமான கிருஷ்ணா தீவிர கிரிக்கெட் ரசிகர் என்பது பலரும் அறியாத விஷயம். இவர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளை நேரில் காண்பதற்காக சென்றிருக்கிறாராம். தற்போது ‘கற்றது களவு’ படத்தில் நடித்து வரும் கிருஷ்ணா, ஷýட்டிங்கை கொஞ்சம் தள்ளி வைக்க சொல்லி விட்டு விடுமுறை எடுத்துக் கொண்டு தென்னாப் பிரிக்காவுக்கு பறந்திருக்கிறார்.

புதுமுகங்கள் நடிக்கும் ‘அப்பா’
அப்பா எனும் பெயரில் ஜெயம் கலை சங்கமம் பட நிறுவனம் படமொன்றை உருவாக்கி வருகிறது. குடும்பத்திற்காக தன்னையே தியாகம் செய்யும் ஒருவனின் நெகிழ வைக்கும் கதையை சொல்லும் இந்தப் படத்தில் புதுமுக நாயகன் கருண் நடித்துள்ளார். படம் முழுக்கவும் இவர் கிறுக்கனாக துணிந்து நடித்திருக்கிறார். கேரளாவில் இருந்து வந்திருக்கும் வளர்மதி இவருக்கு ஜோடி. படத்தில் 2-வது நாயகியாக சத்யா நடித்துள்ளார். ஜெயம் பெருமாள் இயக்கியுள்ளார்.
முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது. படம் ஆகஸ்ட்டில் திரைக்கு வருகிறதாம்.
| |

மற்றவை :