வேடப்பன் படத்தின் இயக்குனர் ஆணைவாரி. ஸ்ரீதர் உற்சாகத்தில் இருக்கிறார். படத்தை ஆரம்பித்த வேகத்தில் 30 நாளில் முடித்து விட்டு ரிலீசுக்கு காத்திருக்கிறார். படத்தை ஜெட் வேகத்தில் முடித்ததற்கு உதவிய தயாரிப்பாளர் பி.ஆர்.கே. மூவிஸ் ராதாகிருஷ்ணனுக்குத்தான் நன்றி கூற வேண்டும் என்று அவர் உற்சாகமாக சொல்கிறார். வசூல் பட நாயகன் ஹேமந்த் குமார் நடிக்க, அவருக்கு ஜோடியாக அப்சரா, நிகிதா நடிக்கின்றனர். இருவருமே கன்னடத்து கிளிகள். அப்சரா படத்தில் பிரபல நடிகையாக நடிக்கிறார்.