Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
கரணின் மலையன்
 
.
Sunday, 03 May, 2009 02:34 PM
.
 காத்தவராயன் படத்திற்கு பிறகு மலையன் படத்தின் நாயகனாக நடித்து கொண்டிருக்கிறார் கரண். இந்த படத்திலும் அவருக்கு ஆவேச இளைஞன் பாத்திரம்.  சிவகாசியை மையமாக கொண்ட கதையில்  கிராமத்தின் உரிமைகளுக்காக நாயகன் கரண் போராடுகிறார். இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரனுடன் உதவியாளராக இருந்த  எஸ்.கோபி  படத்தை இயக்குகிறார்.
.
பாலசுப்பிரமணியன் தயாரிக்கிறார்.  இந்த படத்தில் 3-வது முறையாக இசையமைப்பாளர் தீனாவோடு கரண் கைகோர்க்கிறார்.  பாடல்கள் பட்டையை கிளப்புமாம்.  இந்த படத்தின் கதையை உருவாக்கிய போது கரணைத்தான்  நெஞ்சில் நினைத்திருந்தேன் என்று இயக்குனர் கோபி உறுதியாக சொல்கிறார்.

காஞ்சிவரம் படத்தில் நாயகியாக  நெஞ்சில் நின்ற ஷம்மு, கரணுக்கு ஜோடியாக நடிக்கிறார். மலையனாக வலம்வரும் கரண், கனகவேல் காக்க, கந்தா என கைநிறைய படங்களை வைத்திருக்கிறார்.
| |

மற்றவை :