Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
வித்தகனாகும் பார்த்திபன்
 
.
Sunday, 03 May, 2009 02:23 PM
.
 கொஞ்சம் இடைவெளிக்கு பிறகு  நடிகர் பார்த்திபன் மீண்டும் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார்.  இந்த படத்திற்கான விளம்பரத்திலேயே வியக்க வைப்பது பார்த்திபனுக்கு கைவந்த கலை அல்லவா! இந்த படத்தில் தலைப்பிலும் வியக்க வைக்கிறார்.
.
செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன்  தயாரிக்கும் இந்த படத்தின் பெயர் ‘வித்தகன்’. துணை தலைப்பாக ஆங்கிலத்தில் வித் த கன் என்று போட்டிருக்கின்றனர்.  வித்தியாசமான காவல்துறை அதிகாரியாக பார்த்திபன் நடிக்கிறார்.  இருட்டு உலகில் வாழ்பவர்களை மிரட்டும் பாத்திரத்தில் அவர் அசத்த இருக்கிறார்.

துணிச்சலான, ஆனால் அதே நேரத்தில் குறுக்கு வழியையும் பயன்படுத்த தயங்காத காவல்துறை அதிகாரி வேடமாம் அவருக்கு. பெயர் ரவுத்திரன் என்றால் பார்த்து கொள்ளுங்கள். இந்த கதை தனக்கு மிகவும் நெருக்கமானது என்கிறார் பார்த்திபன். ஜோஷ்வா ஸ்ரீதர் இசையில், எம்.எஸ்.பிரபு காமிராவில் படம் வளர உள்ளது. நளினி ஸ்ரீராம், பார்த்திபனுக் காகவென்று வித்தியாசமான  ஆடைகளை வடிவமைத்துள்ளார்.

முனியாண்டி விலங்கியல் மூன்றாம்  ஆண்டு படத்தின் நாயகி பூர்ணா, பார்த்திபனுக்கு ஜோடியாக நடிக்கிறார். செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் நிறைவடையும் நிலையில் இருக்கும் போது இந்த படத்தை ஆரம்பித்திருக்கும் பார்த்திபன்,  தனது பாணியில், தனித்தனிமையோடு படம் உருவாகும் என்கிறார் நம்பிக்கையோடு.
| |

மற்றவை :