அமீர் நாயகனாக நடிக்கும் யோகி படத்தில் வில்லனாக அரசியல் வாதியான கஸ்ஸாலி நடித்திருக் கிறாராம். இயக்குனரான சுப்பிரமணிய சிவா படத்திற்கு பொருத்தமான வித்தியாசமான வில்லனை தேடிக் கொண்டிருந்த போது ரியல் எஸ்டேட் அதிபராகவும் இருக்கும் கஸ்ஸாலியை அமீர்தான் பரிந்துரைத்தாராம். முதலில் தயங்கினாலும், பின்னர் ஒப்புக் கொண்ட கஸ்ஸாலி, நடிப்பில் அசத்தியதால் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்திருக்கிறதாம். அவையும் வில்லன் வேடன்தானாம். |
தெலுங்கிலும் அயன் ஹிட் எம்.சரவணன், எம்.எஸ். குகன், அருணா குகன், அபர்ணா குகன் இணைந்து தயாரித்திருக்கும் ஏவி.எம். புரொடக்ஷன்ஸ் அயன் படம் தமிழில் சூப்பர் ஹிட்டாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இதே படம் தெலுங்கில் ‘வீடு ஒக்கடே’ என்ற பெயரில் 150 தியேட்டர்களில் வெளியாகி வெற்றி கராமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
மீண்டும் எம்எஸ்வி லலிதசாமி இயக்கும் வாலிபன் சுற்றும் உலகம் படத்திற்கு மெல்லிசை மன்னர் எம்எஸ்வி மீண்டும் இசையமைத்திருக்கிறார். டி.எம்.எஸ்., பி.சுசீலா, எஸ்.பி.பி. மற்றும் வாலி ஆகியோர் மீண்டும் இணைந்துள்ள இந்த படத்தில், எம்.ஜி.ஆர். சிவா, லதா, மனோரமா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
காதல் தோழி ரவிதேஜா, த்ரிஷா நடித்துள்ள தெலுங்கு படமான கிஷ்ணா தமிழில் மதுரை திமிருவாக டப்பாகிறது. இந்த படத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் வந்த கில்லி படத்தில் வரும் அப்படி போடு பாடல் மெட்டுக்கு புதிய வடிவத்தில் பால பாரதி பெட்டக்கோழி எனும் பாடலை எழுதியுள்ளார். பத்திரிகையாளரான இவர், காதல் தோழி படத்தின் மூலம் பாடலாசிரியராக மாறிய அவர். காந்தர்வன், திருப்பாச்சி அருவா, சங்கரன் கோயில் ஆகிய படங்களிலும் பாடல் எழுதி வருகிறார். |