கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘ஆதவன்’ திரைப்படத்தைத் தொடர்ந்து சிங்கம் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு திருநெல்வேலி, தூத்துக்குடி, அம்பா சமுத்திரம், குற்றாலம் மற்றும் காரைக்குடி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், விசாகப்பட்டினம் ஆகிய ஊர்களில் நடைபெறும். ஆறு,வேல் வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குனர் ஹரி- சூர்யா இணையும் மூன்றாவது படம் இது. |