Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
நடிகர்களை நம்பி சினிமா இல்லை
 
.
Tuesday, 28 April, 2009 11:36 AM
.
சென்னை, ஏப். 28: நடிகர்களை நம்பி சினிமா இல்லை என்றும், நல்ல கதை மற்றும் இயக்குனர்களை நம்பியே திரைப்படத்துறை இருப்பதாக இளம் இயக்குனர் தருண் கோபி ஆவேசமாக கூறியுள்ளார். திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக 10 இயக்குனர்கள் சேர்ந்து நடிக்கும் மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
.
ராசு மாதவன் இயக்கத்தில், மணிவண்ணன், பொன் வண்ணன், சீமான், சிங்கம்புலி, நந்தா பெரியசாமி உள்ளிட்ட 10 இயக்குனர்கள்  நடிக்கும் படம் மாயாண்டி குடும்பத்தார்.  சபேஷ் முரளி இசையமைத்துள்ள இந்த படத்தில்,  இயக்குனர் தருண் கோபி  நாயகனாக நடித்துள்ளார்.

விஷால் நடித்த திமிரு மற்றும் சிலம்பரசன் நடித்த காளை ஆகிய படங்களை  இயக்கிய இவர், இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது:- முதல் முறையாக 10 இயக்குனர்கள்  சேர்ந்து நடிக்கும் படம் இது.  இயக்குனர்கள் ஒற்றுமையாக பணியாற்றுவது ஆரோக்கியமான விஷயம். இதற்கு முன்னர் நான் இயக்கிய படங்களில் எனக்கு  நடிகர்களிடம் கசப்பான அனுபவம் ஏற்பட்டது.

சண்டை காட்சிகளில் நடிப்பது மிகவும் கஷ்டமானது என நடிகர்கள் சொல்வதை பார்த்து நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் இந்த படத்தில் நடித்த போதுதான் அது மிகவும் சுலபமானது என்று புரிந்து கொண்டேன்.  இந்த அனுபவத்திற்கு பிறகு இனி வரும் படங்களில் நானே நடிப்பது என தீர்மானித்தேன்.  சினிமா நடிகர்களை நம்பி இல்லை. கதையையும், இயக்குனர்களையுமே நம்பி இருக்கிறது.

உடற்பயிற்சி மூலம் அதிரடியான தோற்றத்தை ஏற்படுத்தி கொண்ட நடிகர்களின் படங்கள் தோல்வி அடைந்துள்ளது.
நல்ல படம் நடிகர்களை  நம்பி இல்லை. அந்த நம்பிக்கையை இயக்குனர்கள் நடிக்கும் இந்த படம் உண்டாக்கும்.  இந்த படத்திற்கு பிறகு உதவி இயக்குனர்கள் அனைவரும் நடிகர்களை தேடி போகாமல்  கதையை நம்பி தாங்களே   நடிக்கக்கூடிய  நிலை உண்டாகும். இந்த படம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

நிகழ்ச்சியில்   பேசிய இயக்குனர் நந்தா பெரியசாமி, இயக்குனர்களால் ஒற்றுமையோடு இருக்க முடியும் என்பதை இந்த படம் உணர்த்தி இருப்பதாக தெரிவித்தார். நிகழ்ச்சியில் பேசிய அனைவரும் ஈகோ இல்லாமல் அனைத்து இயக்குனர்களையும் திறம்பட இயக்கும் படத்தின் இயக்குனரான ராசு மதுரவனை பாராட்டினர்.

 படத்தில் நடிக்கும் சீமான் பலமுறை கைதான நிலையில், மிகுந்த கஷ்டத்திற்கிடையே அவர் படத்தை எடுத்து முடித்த விதத்தையும் பாராட்டினர். சபேஷ் முரளியின் இசையில் பாடல்கள் மண்ணின் மணத்தோடு  வந்திருப்பதாகவும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
| |

மற்றவை :