சிறுவர்களுக்கான நல்ல படம் அடிக்கடி வருவதில்லை எனும் குறையை போக்கும் வகையில், தயாராகி வரும் படம் பசங்க. ஒரு 10 வயது சிறுவனின் கனவு எப்படி ஒட்டுமொத்த பள்ளிக்கூடத்தையும் கனவு காண வைக்கிறது என்பதை நகைச்சுவை, ஆக்ஷன், காதல் என அனைத்து சுவைகளோடும் இந்த படம் சித்தரிக்கிறது.