கேசவ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம் எதுவும் நடக்கும். பொய் சொல்லப்போறோம், வானம் வசப்படும் படங்களில் நடித்த கார்த்திக் குமார் நாயகனாக நடிக்க, கேரள கல்லூரி மாணவி அபர்ணா நாயர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். எல்லோருக்குள்ளும் ஒரு கனவு இருக்கும். அந்த கனவு நிறைவேற வாய்ப்பு கிடைக்கும் போது, அவர்களின் செயல் எப்படி இருக்கும், சமுதாயத்தால் நிராகரிக்கப்படும் மனிதன் தன்னை மாற்றி கொள்ளும் போது என்ன நடக்கும் என்பது போன்ற கேள்விகளுக்கு விடை சொல்லும் வகையில் இந்த படத்தின் கதை அமைந்தது.