அனுஷ்கா நடித்த சுவாகதம், ராஜேந்திர பிரசாத், சங்கவி, ஊர்வசி நடித்த சந்தடி சந்தடி, ரம்யா கிருஷ்ணனின் குஷி குஷி ஆகிய சூப்பர்ஹிட் படங்களை தயாரித்து இருக்கிறார்.
இந்த வெற்றிகளை தொடர்ந்து முன்னணி இயக்குனர்களை வைத்து 10 படங்களை தொடங்கி உள்ளார். தமிழகத்திலும் இவரது ரியல் எஸ்டேட் விரிவடைந்துள்ளது. அடுத்தபடியாக இவர் தமிழ் திரை உலகிற்கும் வருகை தர உள்ளார்.
முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்களை வைத்து பிரம்மாண்டமான படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளார். ஆதித்ய ராமுக்கு சொந்தமாக ஐதராபாத்தில் மிகப்பெரிய ஸ்டுடியோ இருக்கிறது. இந்த ஸ்டுடியோவில்தான் தசாவதாரம் படத்தின் கல்லை மட்டும் கண்டால் பாடல் காட்சி மற்றும் சுனாமி காட்சிகள் படமாக்கப்பட்டன. |