சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கும் இந்த படம், பெயருக்கேற்ப உற்சாகமான படமாக இருக்கும் என்கிறார் வெங்கட். ஜெய், பிரேம்ஜி அமரன், வைபவ், சம்பந்த் ஆகியோரோடு ஸ்நேகாவும் நடித்திருக்கிறார்.
நியூயார்க்கை சேர்ந்த நடிகை ஒருவர் இந்த படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமாகி யிருக்கிறார். இசை யுவன் சங்கர் ராஜா. தேனி, பண்ணையபுரம் ஆகிய ஊர்களில் படப்பிடிப்பு நடக்கிறது. கோவாவிலும் படப்பிடிப்பு நடக்கிறது என்பதை சொல்லவேண்டியதில்லை. |