Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
கின்னஸ் சாதனை தள்ளிவைப்பு
 
.
Monday, 13 April, 2009 12:25 PM
.
சென்னை, ஏப்.13: நாயகனுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக குறைந்த நாட்களில் படமெடுக்கும் கின்னஸ் சாதனை முயற்சி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கனடா வாழ் தமிழரான சுரேஷ் ஜோக்கிம் நாயகனாக நடிக்க 12 நாட்களில் புதிய திரைப்படத்தை எடுத்து வெளியிட திட்டமிடப்பட்டது.
.
கதை, திரைக்கதை முதற்கொண்டு படப்பிடிப்பு, இசையமைப்பு, படத் தொகுப்பு என அனைத்து அம்சங்களும் 12 நாட்களில் முடிக்கப்பட இருந்தது. மீரா ஜாஸ்மின், சுமன், விவேக் உள்ளிட்ட கலைஞர்கள் நடிக்க இருந்த இந்த படம் இன்று புதுவையில் தொடங்குவதாக இருந்தது.

இதனிடையே படத்தின் நாயகன் சுரேஷ் ஜோக்கிம் சண்டைக் காட்சிக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது காயம் ஏற்பட்டு கைமுட்டு விலகியது. அவர் இரண்டு வார காலம் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

எனவே இந்த படத்தின் ஷýட்டிங் துவங்குவது தள்ளிவைக்கப் பட்டுள்ளதாக இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி கூறினார். மற்ற கலைஞர்களை கலந்தாலோசித்த பிறகு படம் எப்போது துவங்கும் என்று அறிவிக்கப்படும் என்று கூறிய அவர், இந்த தடங்கலை மீறி கின்னஸ் சாதனை முயற்சி நிச்சயம் நடைபெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
| |

மற்றவை :