Maalaisudar



 
 
 
 
 
 
 




.
‘மத்திய சென்னை’ கதை
 
.
Monday, 13 April, 2009 12:24 PM
.
புதுமுக நாயகன் ஜெய்வந்த் நடிக்க இரட்டை இயக்குனர்கள் விவேகானந்த், வீரசிங்கம் இயக்கியுள்ள படம் ‘மத்திய சென்னை’.
முற்றிலும் புதியவர்களின் முயற்சி யில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். பிரகாஷ் ராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இருவருமே படத்தின் கதையை கேட்டு, கவரப்பட்டு இதில் பணியாற்றியுள்ளனர்.
.
இயக்குனர் விவேகானந்த் மத்திய சென்னை படத்தின் கதையை விவரித்த போது இளையராஜா கதை அருமையாக இருப்பதாக பாராட்டி விட்டு இசையமைத்து தர ஒப்புக் கொண்டிருக்கிறார்.அதன் பிறகு கேரளாவுக்கு சென்று அமைதியான சூழலில் பாடல்களுக்கு மெட் அமைத்து தந்திருக்கிறார்.

இதே போல பிரகாஷ் ராஜும் கதையை கேட்டு தனக்கு வித்தியாசமான வேடம் வேண்டும் என்று கோரிக்கை வைத்து நடித்து கொடுத்திருக்கிறார். படத்தில் பிரகாஷ் ராஜ் இயக்குனராக நடித்திருக்கிறார். குருதத் என்பது அவரது பெயராம்.' மத்திய சென்னையில் உள்ள ஒரு குப்பத்தில் கதை நடக்கிறது. பாதிப்புக்குள்ளாகும் அந்த குப்பத்தை மீட்பதற்காக நாயகன் நடத்தும் போராட்டத்தில் சினிமாவும் பின்னி பிணைந்திருக்கிறதாம். நிஜமான குப்பம் போலவே கதை இயக்குனர் மதியின் செட்டில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

ராப்டர் மீடியா தயாரித்துள்ள இந்தப் படத்தில் ரம்யா பார்னா எனும் புதுமுகம் நாயகி. சார்லி, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தில் ரவி, கட்டிங் கணேஷ் ஆகியோரும் அறிமுகமாகின்றனர். ஒளிப்பதிவு கார்த்திக் ராஜா, பாடல்கள் வாலி, மு.மேத்தா, பழனிபாரதி, முத்துக்குமார். முழுவதும் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.
| |

மற்றவை :