Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
வேட்டைக்கு தயார்: அனுஷ்கா
 
.
Sunday, 12 April, 2009 10:49 AM
.
 தெலுங்கில் வெற்றிக் கொடி நாட்டி முன்னணி நடிகையாக விளங்கும் அனுஷ்கா, தற்போது  விஜய் நடிக்கும் ஏ.வி.எம்மின் வேட்டைக்காரனில் நாயகியாக நடித்துக் கொண்டிருந்தாலும் தமிழுக்கு புதியவர் அல்ல. ஏற்கனவே மாதவனோடு ரெண்டு படத்தில் இவர் நாயகியாக நடித்திருக்கிறார். ஆனால் அந்த படம் ஏனோ இவருக்கு வெற்றிப்படமாக அமையவில்லை.
.
அதன் பிறகு தெலுங்கிற்கு சென்று முன்னணி நடிகையாக உருவான இவரை, அருந்த தீ திரைப்படம் தமிழிலும் பரபரப்பாக பேச வைத்திருக்கிறது. வேட்டைக்காரன் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் அருந்த தீயின் தமிழ் பதிப்பு பெரிய அளவில் பேசப்படுவது அனுஷ்காவின் செல்வாக்கை அதிகரிக்க செய்துள்ளது.

பொதுவாக ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களே அதிகம் வரும் நிலையில் நாயகிக்கு முக்கியத்துவம் தந்த அருந்த தீ படத்தில் அனுஷ்கா அபாரமாக நடித்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். வேட்டைக்காரன் தவிர தமிழில் வேறு சில படங்களிலும் நடிக்க உள்ள அவர், இப்போது ஐதராபாத்துக்கும், சென்னைக்கும் இடையே இடைவெளி இல்லாமல் பறந்து கொண்டிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு என இரண்டு படவுலகிலுமே கவனம் செலுத்துவதாக கூறும் அனுஷ்கா, தரமான நல்ல படங்களில் நடித்து தனி முத்திரை பதிக்க வேண்டும் என்று விரும்புகிறாராம். திகில் படமான அருந்த தீயில் நடித்த அனுபவம் பற்றி அவர் அலுக்காமல் பேசுகிறார்.

இந்த படத்தில் நடிக்க ஆரம்பித்த போது மிகவும் கடினமாக இருந்ததாக கூறிய அவர், பின்னர் பழகியதாகவும் குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி மற்றும் டிரம் நடன காட்சிகளில் நடிக்க கஷ்டப்பட்டதாக கூறுகிறார். அதே போல 15 எடை கொண்ட தங்க நகைகளை அணிந்து கொண்டு நடித்ததும் சோதனையான அனுபவம் என்று கூறும் அவர், படத்தின் வெற்றி எல்லாவற்றையும் இனிப்பாக ஆக்கி விட்டது என்று கூறுகிறார்.

வேட்டைக்காரன் படம் பற்றி கூறும் அவர், விஜய்யின் ரசிகை என்பதால் இந்த படத்தில் நடிக்க உடனே ஒப்புக் கொண்டதாகவும், படம் சிறந்த பொழுது போக்கு சித்திரமாக அமையும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறுகிறார். ஆக தமிழ் திரைப்பட உலகில் வேட்டைக்கு தயாராக இருப்பதாக கூறும் அனுஷ்கா, யோகா பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். அவருடைய டிரிம்மான, ஸ்லிம்மான உடலழகின் ரகசியமும் அதுதான்.
| |

மற்றவை :