Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
ராசி 12.4.09 முதல் 18.4.09 வரை
 
.
Saturday, 11 April, 2009 03:48 PM
.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

கடின உழைப்பை கண்டு அஞ்சாத மேஷ ராசியினரே உங்களுக்கு திடீரென்று  வரும் கோபத்தை கட்டுப்படுத்தினால் வெற்றி நிச்சயம். இந்த ராசியாதிபதி செவ்வாய் வார மத்தியில் ராசிக்கு 12ல் சஞ்சாரம் செய்வதும் ராசியில் சூரியன் புதனுடன் சேர்ந்து இருப்பதும் புத ஆதித்ய யோகம் பெறுவதால் புத்திக் கூர்மையுடன் செயல்களை செய்து எதிலும் வெற்றி பெறுவீர்கள். வசதிகள்  அதிகரிக்கும். மதிப்பும், மரியாதையும் கூடும். ஆனால் வீண் செலவுகள் உண் டாகும். மனதுக்கு பிடிக்காத இடத்திற்கு சென்று வரவேண்டி இருக்கும்.
.
தொழில் வியாபாரம் தொடர்பாக பயணங் கள் சென்று வரவேண்டி இருக்கும். வியாபாரம் தொடர்பான செலவு கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்ப வர்கள் வீண் அலைச்சலை சந்திப்பார் கள். குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகலாம் கவனம் தேவை.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் அனு சரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே தேவையற்ற மன வருத்தம் உண்டாகலாம் கவனம் தேவை. மருத்துவம் தொடர்பான செலவும் ஏற் படலாம். ஆயுதம், நெருப்பு ஆகிய வற்றை கையாளும்போது கவனமாக இருப்பது நல்லது.

பெண்களுக்கு: புத்தி கூர்மையுடன் செயல்பட்டு காரியங்களை வெற்றி கரமாக செய்து முடிப்பீர்கள். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.
மாணவர்களுக்கு: சக மாணவர்களுடன் பழகும்போது கவனம் தேவை. கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது.

சந்திராஷ்டமம்:  12.4.2009 பகல் 12.45 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்கி 14.4.2009 இரவு 11.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தடை தாமதம் உண்டாகும்.  புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தள்ளி போடுவது நல்லது.

பரிகாரம்:  திருத்தணி முருகனை அர்ச்சனை செய்து வணங்கி வழிபட மனக்கவலை தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

ரிஷபம்
(கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)


எந்த நிலையிலும் அடுத்தவர் பற்றி ரகசியங்களை வெளியே சொல்லாமல் மனதில் வைத்துக்கொள்ளும் இயல்புடைய ரிஷபராசியினரே இந்த வாரம் ராசியாதிபதி சுக்கிரனுடன் செவ்வாய் சேர்க்கை பெற்று 11ல் சஞ்சாரம் செய்வது எந்த ஒரு காரியமும் வெற்றியடைவதுடன் லாப கரமாகவும் இருக்கும். பணவரத்து அதிகரிக்கும். செயல் திறன் மேலோங் கும். இழுபறியாக இருந்த ஒரு சில விஷயங்கள் நல்ல முடிவுக்கு வரும். வீடு, வாகனங்கள் வாங்கும் நிலை உருவாகும்.

தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். விவசாயம், ரியல்எஸ்டேட் தொழில் லாபம் தரும். வியாபார வளர்ச் சிக்கு புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் உள்ள பணம் கைக்கு கிடைக் கும். பயணங்களால் லாபம் கிடைக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்திற்கு  தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக வாங்க  நினைத்த ஆடை, ஆபரணம் வாங்க நேரிடும். குடும்பத்தில் இருப்பவர்களு டன் விருந்து நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவீர்கள். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.

பெண்களுக்கு: பணவரத்து அதிகரிக்கும். எந்த ஒரு காரியமும் லாபகரமாய் நடந்து முடியும். செயல் திறன் கூடும்.

மாணவர்களுக்கு: பாடங்களை மனநிறை வுடன் படிப்பீர்கள். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடையும்.

சந்திராஷ்டமம்: 14.4.2009 இரவு 11.30 மணிமுதல் சந்திராஷ்டமம் தொடங்கி 17.4.2009 பகல் 11 மணி வரை இருப்ப தால் காரியங்களில் தடை தாமதம் உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்படும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் நவ கிரகத்தில் சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி பூஜை செய்ய பணவரத்து கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுனம்
(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

எதையும் திட்டவட்டமாக பேசி காரியங்களில் குழப்பம் இல்லாமல் வெற்றிகரமாக செய்து முடிக்கும் ஆற்றலை உடைய மிதுன ராசியினரே இந்த வாரம் ராசியாதிபதி புதன் ராசிக்கு 11ல்  வார மத்தியில் சூரியனுடன் சேர்க்கை பெற்று நிபுணத்துவ யோகம் பெற்று சஞ்சாரம் செய்வதால் எதையும் ஆராய்ந்து பார்த்த பிறகே அதை செய்ய முற்படுவீர்கள். தொட்ட காரியம் வெற்றியில் முடிந்தாலும் சற்று கால தாமதம் ஆகலாம். பணவரத்து கூடும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

தொழில், வியாபாரம் மிகவும் சிறப்பாக நடைபெறும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வியாபாரம் மற்றும் தொழிலை விரிவுபடுத்துவது பற்றி திட்டங்களை செயல்படுத்துவீர்கள். பயணங்கள் சாதகமான பலனை தரும். உத்தியோகஸ் தர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வேலை பற்றிய கவலை நீங்கும். நிர்வாகத்தின் ஆதரவும் இருக்கும்.

ராசிக்கு 10ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும் செவ்வாய் சேர்க்கை பெற்று இருப்பதும் குடும்பத்தில் வாக்கு வாதங் கள் உண்டாகலாம். வாழ்க்கை துணையை யும் குழந்தைகளிடமும் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்திற்காக கூடுத லாக உழைக்க வேண்டியது இருக்கும்.

பெண்களுக்கு: எடுத்த காரியத்தை செய்து முடிக்க கால தாமதம் ஏற்படும். திட்டமிட்டு செயல்படுவது முன்னேற்றத் துக்கு வழிவகுக்கும்.

மாணவர்களுக்கு: எதிர்காலம் பற்றிய திட்டங்கள் மனதில் தோன்றும். கல்வி யில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம்:  17.4.2009 பகல் 11 மணி முதல் சந்திராஷ்டம் தொடங்கி 18.4.2009 அன்று முழுவதும் இருப்பதால் புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. வீண் அலைச்சலும் தடை, தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை.

பரிகாரம்: சனிக்கிழமையில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து வெங்கடாஜலபதியை வணங்க பிரச்சனை கள் தீரும். பண கஷ்டம் தீரும்.

கடகம்
(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)


எப்போதும் ஒரே கருத்தை கொள்ளாமல் அவ்வப்போது எண்ணங்களையும் கருத் துக்களை மாற்றிக்கொள்ளும்  குண முடைய கடக ராசியினரே நீங்கள் எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். இந்த வாரம் ராசிக்கு 10ல் சஞ்சாரம் செய்யும் சூரியனும், புதனும் இணைந்து புத ஆதித்ய யோகத்தை தருவதால் தொழில் தொடர்பான விஷயங்களில் தீர ஆலோசித்து ஒரு முடிவுக்கு வருவீர்கள். பலராலும் செய்ய முடியாத காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும் நிலை வரலாம். பணவரத்து திருப்தி தரும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாக்கு வன்மையால் எளிதாக தங்களது தொழில் மற்றும் வியா பாரத்தில் நல்ல லாபம் கிடைக்க பெறு வார்கள். பிரச்சனைகளை பேசியே தீர்த்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர் கள் பதவி உயர்வு கூடுதல் பொறுப்பு கிடைக்க பெறுவார்கள். எதிலும் திட்ட மிட்டு செயலாற்றுவதால் மேல் அதிகாரி களின் பாராட்டும் கிடைக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களால் கூடுதல் வருமானம் கிடைக்கும். முக்கிய நபர்க ளின் அறிமுகத்தால் நன்மை உண்டா கும். கணவன், மனைவிக்கிடையே சுமூகமான நிலை காணப்படும். பிள்ளை களுக்காக கூடுதல் நேரம் செலவு செய்ய வேண்டி இருக்கும்.
பெண்களுக்கு: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதையும் புத்திசாதுரியத்தை பயன் படுத்தி சமாளிப்பீர்கள்.

மாணவர்களுக்கு: பாடங்கள் படிப்பதில் ஆர்வம் உண்டாகும். ஆசிரியர்களின் ஆதரவுடன் படித்து தேர்வில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம்: இல்லை

பரிகாரம்: சரஸ்வதி தேவியை பூஜித்து வர காரியங்களில் வெற்றி உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.

சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)


கம்பீரமான தோற்றத்தை உடைய சிம்ம ராசியினரே நீங்கள் சுறுசுறுப்பாகவும் அடுத்தவரை அடக்கி ஆளும் திறமையும் பெற்று இருப்பீர்கள். இந்த வாரம் ராசியாதிபதி சூரியன் வார மத்தியில் ராசிக்கு 9ல் புதனுடன் சேர்ந்து நிபுணத்துவ யோகத்தை தருவதும் ராசியாதிபதி உச்சம் பெற்று இருப்பதும் மனதில் தெளிவு உண்டாகும். ஆக்க பூர்வமான யோசனைகள் தோன்றும். கடித போக்குவரத்து அனுகூலமான பலனை தரும். பயணம் லாபகரமாக இருக்கும்.

புதுவியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். தொழில் முன்னேற்றம் காணப்படும். கடித போக்கு வரத்து மூலம் தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சாமர்த்தியமாக வாடிக்கையாளர்களுடன் பேசி அவர் களை தக்க வைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர் காலம் பற்றிய திட்டங்களை வகுப்பார் கள். பணவரத்தும் இருக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களிடம் தன்மை யாக பேசி பழகுவது நல்லது. தகப்பனா ருடன் வீண் தகராறு ஏற்படலாம். கவனம் தேவை. கணவன், மனைவி ஒருவருக் கொருவர் பேசி செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். குழந்தைகளு டன் நிதானமாக பேசி அவர்களுக்கு எதையும் புரிய வைப்பது நல்லது. அவர்க ளது முன்னேற்றத்துக்காக பாடுபடுவீர்கள்.
பெண்களுக்கு: மனதில் இருந்த குழப் பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். பயணங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

மாணவர்களுக்கு: கல்வியை பற்றிய பயம் நீங்கும். குழப்பம் இல்லாத தெளி வான மனதுடன் பாடங்களை படித்து வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம்: இல்லை

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் சிவனை வில்வ அர்ச்சனை செய்து வணங்க மனதில் தைரியம் பிறக்கும். காரிய வெற்றி உண்டாகும்.

கன்னி
(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)


கலகலப்பாக பேசி பழகாமல் ஒதுங்கி இருப்பதை தவிர்த்து அனைவரிடமும் இயல்பாக பேசி வருவது கன்னி ராசியின ருக்கு வெற்றிக்கு வழிவகுக்கும். இந்த வாரம் ராசியாதிபதி  புதன் ராசிக்கு 8ல் சூரியனுடன் சேர்க்கை பெற்று சஞ்சாரம் செய்வது மற்றவர்களின் ஆதரவு கிடைக்க செய்யும். புத்தி சாதுர்யத்தை பயன்படுத்தி காரியங்களை  வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். செயல்திறன் அதிகரிக்கும். ஆனால் பயணங்களின்போது உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை.

தொழில் வியாபாரம் தொடர்பாக அலைச்சல் உண்டாகும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத் தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சொல்லியபடி நடப்பது நன்மை தரும். சிலர் புதிய வேலைக்கு நடப்பது நன்மை தரும். சிலர் புதிய வேலைக்கு முயற்சி செய் வார்கள். அது கிடைப்பது தாமதமாகலாம்.
குடும்பத்தில் சுமூகமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கை துணை உங்க ளுக்கு பல விதத்திலும் உதவிகள் செய்வார். உறவினர் வருகை இருக்கும். அவர்களி டம் நிதானமாக பேசுவது நல்லது. அனுபவ பூர்வமான அறிவு திறனை உபயோகித்து எதிலும் வெற்றி காண்பீர்கள்.

பெண்களுக்கு:உங்களது செயல்களுக்கு மற்றவர்களின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மாணவர்களுக்கு: பெற்றோர், ஆசிரியர் கூறியபடி செயல்படுவது கல்வியில் வெற்றி பெற உதவும். மனோ தைரியம் கூடும்.

சந்திராஷ்டமம்: இல்லை

பரிகாரம்: நரசிம்மரை வணங்க மனதில் தைரியம் உண்டாகும்.  எதிர்ப்புகள் அகலும். எதிலும் வெற்றி உண்டாகும்.

துலாம்
(சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)


எதையும் எதிர்த்து நின்று சமாளிக்கும் திறமை உடைய துலாம் ராசியினரே உங்கள் மனம் குழப்பம் இன்றி தெளிவாக இருக்கும். இந்த வாரம் ராசியாதிபதி சுக்கிரன் ராசிக்கு 6ல் வார தொடக்கத்தில் சூரியனுடன் சேர்க்கை பெற்று இருப்பது நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் காரியம் சாதகமான பலன் தரும். வார மத்தியில் சூரியன் ராசிக்கு 7க்கு பெயர்ச்சிய டைந்து புதனுடன் சேர்க்கை பெறுவது திட்டமிட்டு செய்யும் பயணங்கள் வெற்றி பெறும். செலவு செய்வது பற்றி யோசனை செய்து தேவையென்றால் மட்டுமே செய்வீர்கள்.

தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பங்குதாரர்களுடன் ஆலோசனை செய்து வியாபாரத்தை  மேற்கொள்வது கூடுதல் லாபம் கிடைக்க   வழிசெய்யும். உத்தியோகத்தில் இருப்ப வர்கள் சக பணியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து முக்கிய முடிவுகள் எடுப்பது நன்மை தருவதாக இருக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களிடம் அனு சரித்து நடந்து கொள்வது அமைதியை தரும். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகளால் குடும்ப விஷயங்கள் சாதகமாக நடக்கும். பிள்ளை களால் பெருமை சேரும்.

பெண்களுக்கு: மற்றவர்கள் உதவியுடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது.

மாணவர்களுக்கு: கல்வியில் வெற்றி பெற நண்பர்களின் உதவி கிடைக்கும். வீண் செலவை குறைப்பது நல்லது.

சந்திராஷ்டமம்: இல்லை

பரிகாரம்: வைஷ்ணவி தேவியை வழி பட்டு வர நோய் நீங்கி உடல் ஆரோக்கி யம் உண்டாகும். பணவரத்து கூடும்.

விருச்சிகம்
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)


அறிவும், ஆற்றலும் ஒருங்கே  பெற்ற விருச்சிக ராசியினரே நீங்கள் பிடிவாத குணத்தை தளர்த்திக் கொண்டால் எதிலும் வெற்றி நிச்சயம்.  இந்த வாரம் ராசியாதிபதி செவ்வாய் ராசிக்கு 5ல் வார மத்தியில்  பெயர்ச்சி அடைந்து அங்கு சஞ்சரிக்கும் சுக்கிரனுடன் சேர்க்கை பெற்று இருப்பதால் புத்தி கூர்மையுடன் எதையும் செய்வீர்கள். எதிர்காலம் தொடர்பான திட்டங்கள் மனதில் தோன் றும். எதையும் முன்னேற்பாட்டுடன் செய்வீர்கள். விவேகம் உண்டாகும்.

தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள்  சாதகமாக நடந்து முடிய திறமையாக செயல்படுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் அவசரப்படாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏற்க னவே  செய்த திறமையான பணிகளுக்கு  உரிய நற்பலனை பெறுவார்கள்.

குடும்பத்தில் தாய்வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறும். கணவன், மனைவிக்கிடையே  நெருக்கம் அதிகரிக்கும். உயர்ந்த ஆடை ஆபரணங் கள் சேரும். நல்லது கெட்டது அறிந்து செயல்பட்டு நன்மை கிடைக்க பெறுவீர் கள். பணவசதி கூடும். குழந்தைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அவர்களிடம் அன்பு அதிகரிக்கும்.

பெண்களுக்கு: எந்த ஒரு செயலை செய்யும் முன்பும் அதில் இருக்கும் நல்லது கெட்டதை ஆராய்ந்து பார்த்த பின் அதில் ஈடுபடுவது நல்லது. பணவரத்து திருப்தி தரும்.
மாணவர்களுக்கு: எதையும் அவசரமாக செய்யாமல் யோசித்து செயல்படுவது நல்லது. கல்வியை பற்றிய கவலை குறையும்.

சந்திராஷ்டமம்: இல்லை

பரிகாரம்: காசி விசாலாட்சியை வழிபட  எதிர்ப்புகள்  அகலும். காரிய தடை நீங்கும்.

தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)


அடக்கமான சுபாவம் உடைய தனுசு ராசியினரே நீங்கள் தன்மையாக எல் லோரிடமும் பழக கூடியவர்கள். இந்த வாரம் ராசிக்கு 4ல்  செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் செலவு கூடும். வாகனங் களால் செலவு உண்டாகும். மனதில் வீண் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

ராசிக்கு 5ல் சூரியன் சஞ்சாரம் செய்வ தால் நெருக்கடியான சந்தர்ப்பத்தில் உதவிகள் கிடைப்பது கடினமாக இருக் கும். எந்த காரியங்களில் ஈடுபட்டாலும்  மன தடுமாற்றம் இல்லாமல் இருப்பது நல்லது.

தொழில் வியாபாரம் தொடர்பான காரி யங்களில் இழுபறியான நிலை காணப் படும். வீண் அலைச்சல் எதிர்பாராத செலவும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகாரிகள் கூறிய வேலையை  செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். சகஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.

குடும்பத்தில் ஏதாவது ஒரு விஷயம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்படும். கணவன், மனைவி அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்கள் உறவினர்களுடன் மனஸ்தாபம் உண்டாகலாம். எச்சரிக்கை யாக இருப்பது நல்லது.

பெண்களுக்கு: மனதடுமாற்றம் இல்லாமல் எதையும் செய்வது நல்லது. தேவையான உதவிகள் கிடைப்பது தாமதப் படும். வீண் அலைச்சல் உண்டாகலாம்.

மாணவர்களுக்கு: கவன தடுமாற்றம் இல்லாமல் பாடங்களை படிப்பது நன்மை தரும். சக மாணவர்களிடம் எச்சரிக்கை யாக பழகுவது நல்லது.

சந்திராஷ்டமம்: இல்லை

பரிகாரம்: ஸ்ரீரமண மகரிஷியை வணங்கி வருவது மன அமைதியை தருவதுடன் எல்லா நன்மைகளையும் தரும்.

மகரம்
(உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)


எந்த ஒரு வேலையையும் நுணுக்கமாக செய்து மற்றவர்களின் பாராட்டை பெறும் மகர ராசியினரே இந்த வாரம் ராசிக்கு இரண்டில் சஞ்சாரம் செய்த செவ்வாய் ராசிக்கு மூன்றில் சஞ்சாரம் செய்வதால் பல்வேறு நன்மைகள் உண்டாகும். கடினமான பணிகளையும் செய்து முடிக் கும் துணிச்சல் ஏற்படும். காரிய வெற்றி யால் மனதில் சந்தோஷம் உண்டாகும். நான்கில் சூரியன் சஞ்சாரம் செய்வதால் இருக்கும் இடத்தை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடும்.

தொழில் வியாபாரம் வேகம் பிடிக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். தொழில் வியாபாரம் பற்றி மனதில் இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும். உத்தியோகத்தில்  இருப்பவர்கள் அலுவல கத்தில் கொடுத்த வேலையை சிறப்பாக  செய்து முடிப்பார்கள்.  அலுவலக வேலையாக வெளியூர் செல்ல நேரலாம்.

கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் குறையும்.  குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு  இருக் கும். பிள்ளைகளின் மீது கவனம் தேவை. வாகனங்களால் செலவு இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் உடல் நிலை யில் கவனம் தேவை.

பெண்களுக்கு: மனதில் மகிழ்ச்சி உண் டாகும்படியான சூழ்நிலை உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரலாம்.

மாணவர்களுக்கு: பாடங்கள் படிப்பது மனதில் மகிழ்ச்சியை உண்டாக்கும். தேர் வில் அதிக மதிப்பெண் குறிக்கோளுடன்  செயல்படுவீர்கள்.

சந்திராஷ்டமம்: இல்லை

பரிகாரம்: சனி பகவானை தீபம் ஏற்றி வணங்கி வழிபட உடல் ஆரோக்யம் பெறும். கஷ்டங்கள் குறையும்.

கும்பம்
(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)


எடுத்த காரியத்தை எத்தனை குறுக்கீடு கள் வந்தாலும் அதை சமாளித்து செய்து முடிக்கும் திறன் உடைய கும்பராசியி னரே இந்த வாரம் ராசிக்கு இரண்டில் செவ்வாய் சஞ்சாரம் வார மத்தியில் தொடங்குவதால் கவுரவ பிரச்சனை உண் டாகும். நீங்கள் நல்லதாக பேசினாலும் எதிரில் உள்ளவர்கள் அதை தவறான கண்ணோட்டத்துடனேயே பார்ப்பார்கள். 

மற்றவர்களின் செயல்களால் மன அமைதி கெடவும்  வாய்ப்பு உண்டு.  சூரியன் சஞ்சாரம் பணவரத்தை தரும். நீண்ட நாட் களாக இருந்து வந்த பிரச்சனை தீரும்.

தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள்  கூடுதல் முயற்சிக்கு பிறகு எதிர்பார்த்தபடி  நடந்து முடியும். பயணங் கள் செல்ல நேரிடலாம். புத்தியை உபயோகித்து வியாபாரத்தில் புதுமையை செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடு படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் கிடைக்கலாம்.

குடும்பத்தில் மனைவி குழந்தைகளுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு  நீங்கும். உறவினர் கள் நண்பர்கள் உதவ முன்வந்தாலும்  உதவி தாமதமாக கிடைக்கும்.  சகோதரர் களால் மனவருத்தம் உண்டாகும்படி யான சம்பவம் நேரலாம் கவனம் தேவை.

பெண்களுக்கு: அடுத்தவர் பேசுவதை காதில் வாங்காமல் தவிர்ப்பது நல்லது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்சனைகள் குறையும். மனதில் எதிர்காலம் பற்றிய சிந்தனை உண்டாகும்.

மாணவர்களுக்கு: சக மாணவர்கள், நண்பர்களிடம் அதிகம் பேசி பழகுவதை தவிர்ப்பது நல்லது.  பாடங்களில் கூடுதல் கவனத்துடன் படிப்பது நன்மை தரும்.

சந்திராஷ்டமம்: இல்லை.

பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வழிபட எல்லா துன்பங்களும் நீங்கும். காரிய வெற்றி உண்டாகும்.

மீனம்
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)


எதை செய்தாலும் தன்னம்பிக்கையை கொண்டு சொந்த முயற்சியிலேயே செய்து வெற்றிபெறும் மீனராசியினரே இந்த வாரம் ராசியாதிபதி குரு சஞ்சாரம் ராசிக்கு பதினொன்றில் இருப்பதால் பணவரத்து அதிகரிக்கும். அறிவு திறமை வெளிப்படும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். ராசியில் செவ்வாய் சஞ்சாரம் இருப்பதால் அடுத்தவர்களின் குற்றச்சாட்டுக்கு ஆளாகநேரிடலாம் கவனம் தேவை. 

சூரியன் சஞ்சாரம் ராசிக்கு இரண்டில் இருப்பதால் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும்.
தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் சாமர்த்தியமாக பேசுவதன் மூலம் வியாபாரம் வளர்ச்சி பெறும்.  அடுத்தவர்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்கும் போது கவனம் தேவை. அவற்றை ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது. உத்தியோகஸ் தர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வேலைக்கு முயற்சி செய்பவர் களுக்கு  வேலை கிடைக்கலாம்.

குடும்பத்தில் வாக்குவாதத்தையும், கோபத்தையும் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கை துணையுடன்  அனுசரித்து செய்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. விருந்தினர்கள் வந்து செல்வார்கள்.

பெண்களுக்கு: எந்த ஒரு காரியத்தை யும் செய்து முடிக்க கூடுதல்நேரம் உழைக்க வேண்டி இருக்கும். பணவரத்து எதிர் பார்த்தபடி இருக்கும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

மாணவர்களுக்கு: மற்றவர்களை அனு சரித்து செல்வது நன்மைதரும். விளை யாட்டுகளில் கவனம் செலுத்துவதுடன் கல்வியிலும்  கூடுதல் கவனம் நன்மை தரும்.

சந்திராஷ்டமம்: 12.04.2009 அன்று பகல் 12.45 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கூடுதல் கவனம் தேவை.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வியாழக் கிழமையில் நெய்தீபம் ஏற்றி வழிபடுவது வெற்றிக்கு உதவும். கடன் பிரச்சனை குறையும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.
| |

மற்றவை :