Maalaisudar
Advertisements


 
 
 
 
 
 
 




.
இனி நாயகனாக நடிக்க மாட்டேன்
 
.
Thursday, 09 April, 2009 11:13 AM
.

இனி குணச்சித்திர வேடங்களில் மட்டுமே நடிப்பேன் என்றும், கதா நாயகனாக நடிக்கப்போவதில்லை என்று தீர்மானித்திருப்பதாக நடிகர் சத்யராஜ் கூறினார். ‘களவாடிய பொழுதுகள்’ படத்தில் ஒரு பாடல் காட்சியில் தந்தை பெரியாராக நடிக்கும் சத்யராஜ் கூறியதாவது:-

.
தங்கர்பச்சான் சிறந்த இயக்குனர். அவருடைய ஒன்பது ரூபாய் நோட்டு படத்தில் மாதவ படையாச்சி பாத்திரத்தில் நடித்திருந்தேன். என்னுடைய நடிப்பாற்றலை முழுவதும் வெளிப்படுத்திய படம் இது.

30 ஆண்டுகளுக்கு மேலாக திரைவுலகில் நடித்து விட்டேன். இனிமேலும் கதாநாயகனாக நடிக்கப்போவதில்லை.  தொடர்ந்து ஆடிப்பாடிக்கொண்டு, சண்டை போட்டுக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை.

அமிதாப்பச்சன் போல குணச்சித்திர வேடங்களில் மட்டுமே நடிப்பேன். கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் வேடங்களில் நடிப்பேன். இந்த முடிவால் நாயகனாக நடிக்க வாய்ப்பு வந்த 10 படங்களை நிராகரித்திருக்கிறேன்.
| |

மற்றவை :