Maalaisudar



 
 
 
 
 
 
 




.
பாடல் காட்சியில் பெரியார், ஜீவா
 
.
Thursday, 09 April, 2009 11:12 AM
.
ஐங்கரன் இன்டர்நேஷனல் தயாரிப்பில் தங்கர்பச்சான் இயக்கும் புதிய படம் ‘களவாடிய பொழுதுகள்’. பிரபுதேவா நாயகனாக நடிக்க, பூமிகா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அழகி முதல் ஒன்பது ரூபாய் நோட்டு வரை அழுத்தமான படங்களை கொடுத்துள்ள தங்கர்பச்சானின் படங்களில் பொதுவாக அர்த்தமுள்ள பாடல்கள் இடம்பெற்றிருக்கும்.
.
களவாடிய பொழுதுகள் படத்திற்காக முதல் முறையாக தங்கர் பச்சான் பிரம்மாண்டமான செட் போட்டு பாடல் காட்சி ஒன்றை படமாக்கி வருகிறார். இது தொழிலாளர் இயக்கத்தின் எழுச்சியை சித்தரிக்கும் வகையிலான இந்த பாடலுக்காக, செங்கொடிகள் பறக்கும் பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டிருந்தது. கம்யூனிஸ்ட் பிதாமகர் காரல்மார்க்ஸ், தந்தை பெரியார், தோழர் ஜீவானந்தம் ஆகியோரின் கட் அவுட்டுகளும் பின்னணியில் இடம்பெற்றிருந்தன.

ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் மத்தியில் இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டது.  இப்பாடல் காட்சி படமாக்கப்பட்ட விதத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளர் என்.வரதராஜன் நேரில் வந்து பார்வையிட்டார்.
இந்த பாடல் காட்சியை பெரியார் மற்றும் ஜீவானந்தம் தோன்றுவது விசேஷமான அம்சம்.

பெரியாராக, நடிகர் சத்யராஜ் தோன்றினார். இந்த பாடல் காட்சிக்காக கலை இயக்குனர் கதிர் பிரம்மாண்டமான செட் போட்டிருந்தார். தமிழர்களை தட்டி எழுப்பும் வகையிலான இந்த பாடலை வைரமுத்து எழுதியிருக்கிறார். எழுச்சிமிகு இந்த பாடல் படத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் என்று இயக்குனர் தங்கர் பச்சான் நம்பிக்கை தெரிவிக்கிறார். அழகி முதல் ஒன்பது ரூபாய் நோட்டு வரை தன்னுடைய படங்கள் அனைத்திலும் ஒரு செய்தி இடம் பெற்றிருப்பதாக கூறும் தங்கர் பச்சான், இந்த படம் சமூக அவலங்களை வெளிக்கொணறும் வகையில் இருக்கும் என்று கூறுகிறார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரபுதேவா இந்த படத்தில் நாயகனாக நடிப்பது குறிப்பிடத்தக்க விஷயம். நடிப்பதை நிறுத்திவிட்டு இயக்கத்தில் கவனம் செலுத்தி வரும் பிரபுதேவா, இந்த படத்தின் கதையை தன்னிடம் கூறி நீங்கள்தான் இதில் நடிக்க வேண்டும் என்று தங்கர்பச்சான் கூறியவுடனேயே சம்மதித்து விட்டதாக கூறினார். இந்த படம் நிச்சயம் தனக்கு சிறந்த படமாக அமையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
| |

மற்றவை :