தொழில் வியாபாரம் வழக்கம் போல் இருக்கும். வியாபாரம் தொடர்பான சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். உங்களது பொருட்களை வாடிக்கையாளர் களுக்கு அனுப்பும் போது அவை போய் சேர்ந்தனவா என்று கண்காணிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. வேலை தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகலாம்.
குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வீண் பேச்சுகளை தவிர்ப்பதும் நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே சிறு பூசல்கள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளை களிடம் நிதானமாக பேசுவது நல்லது.
பெண்களுக்கு: எதைபற்றியும் அதிகம் யோசித்து மனதை குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். வரவும் செலவும் சரியாக இருக்கும்.
மாணவர்களுக்கு: கல்வியை அதிகம் கவலைப்படாமல் பாடங்களை நன்கு படிப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து கந்தர்சஷ்டி கவசம் படித்து முருகனை வணங்குவது எல்லா நன்மை களையும் தரும்.
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) எந்தஒரு காரியத்திலும் அனுபவ அறிவைக் கொண்டு திறம்பட செயலாற் றும் ரிஷப ராசியினரே இந்த வாரம் ராசிக்கு 12ல் சஞ்சாரம் செய்யும் புதனால் பண வரத்து திருப்தி தரும். ஆனால் உங்களுக்கு நன்மை செய்கிறேன் என்று கூறிக் கொண்டு உங்களை சுற்றி வருபவர்களால் செலவு உண்டாகும் கவனம் தேவை. திடீர் கோபம் ஏற்பட்டு அதனால் அடுத்தவர் களிடம் சண்டை உண்டாக நேரலாம். எனவே மிகவும் நிதானமாக இருப்பது நல்லது. வீண் பேச்சை குறைப்பது நன்மை தரும். அடுத்தவருக்கு ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.
தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களை மற்றவர்களிடம் கூறி ஆலோசனை கேட்பதோ அல்லது அதைப் பற்றி விவாதிப்பதையோ தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங் களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும். மேல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களது செய்கை கள் உங்களது கோபத்தை தூண்டும் படியாக இருக்கலாம். நிதானத்தை கடை பிடிப்பது வீண் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். வாழ்க்கை துணை ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும்.
பெண்களுக்கு: வீண்பேச்சை குறைத்துக் கொண்டு செயலில் ஈடுபடுவது வெற்றியை தரும். மற்றவர்களுக்காக எந்த உத்திர வாதமும் தராமல் இருப்பது நல்லது.
மாணவர்களுக்கு: நட்பு வட்டத்தில் இருப்பவர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது. பாடங்கள் படிப்பதில் ஆர்வம் உண்டாகும்.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: பவுர்ணமியில் மகாலட்சுமியை அர்ச்சனை செய்து வணங்க எல்லா செல் வங்களும் சேரும். கடன் பிரச்சனை தீரும்.
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)
எதையும் ஆராய்ந்து பார்த்து அதில் இருக்கும் சாதகபாதகங்களை தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு செயல்படும் மிதுனராசியினரே இந்த வாரம் ராசிக்கு 11ல் ராசியாதிபதி புதன் சஞ்சாரம் செய்வது எந்த ஒரு காரியத்திலும் லாபம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் மூலம் நன்மை உண்டாகும். எதை விரும்பினாலும் அது கிடைக்க வழி தெரியும். தொலைதூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக வந்து சேரும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும். பணியாளர்கள் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். தொழில் விரிவாக் கம் செய்யும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர் பார்த்த பணவரத்து கிடைக்க பெறுவார் கள். மேல் அதிகாரிகளின் ஆதரவும் இருக்கும்.
குடும்பத்தில் அவ்வப்போது ஏதாவது சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு மறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். உடல் ஆரோக்யம் அடையும் சொல்வன்மை அதிகரிக்கும். உறவினர் கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.
பெண்களுக்கு: எந்த ஒரு காரியத்தையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். தொலை தூர தகவல்கள் நல்ல தகவலாக வரும். பயணம் செல்ல நேரலாம்.
மாணவர்களுக்கு: கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறும்.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: வியாழக்கிழமையில் ஆஞ்ச நேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபட எல்லா பிரச்சனைகளும் தீரும். மனோ தைரியம் கூடும்.
கடகம் (புனர் பூசம் 4ம் பாதம்,பூசம், ஆயில்யம்)
எந்த ஒரு செயலையும் முன்கூட்டியே திட்டமிட்டு செய்து எதிரிகளை அசத்தும் கடகராசியினரே இந்த வாரம் ராசிக்கு 10ல் புதன் சஞ்சாரம் செய்வது வாக்கு வன்மையால் நன்மை உண்டாகும். செய்யும் காரியத்தை சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து முடித்து மற்றவர்களிடம் பாராட்டு பெறுவீர்கள். சிலருக்கு உங்கள் செல்வாக்கை கண்டு பொறாமை உண்டாகலாம் கவனம் தேவை. எதிர்ப்புகள் விலகும். காரிய தடைகள் நீங்கும்.
தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் வேகம் பிடிக்கும். வாடிக்கை யாளர் எண்ணிக்கை கூடும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் மும்முரமாக ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் வேலை பளு இருந்தாலும் எல்லா பணி களையும் திறம்பட செய்து முடிப்பார்கள். பணவரத்து திருப்தி தரும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தை களால் பெருமை சேரும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.
பெண்களுக்கு: காரிய தடைகள் நீங்கி எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப் பீர்கள். வாக்குவன்மையால் நன்மை உண்டாகும்.
மாணவர்களுக்கு: படிக்காமல் விட்ட பாடங்களை படிப்பதில் கவனம் செலுத்து வீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபடுவீர்கள்.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: திருவொற்றியூர் வடிவுடை அம்மனை தரிசித்து அர்ச்சனை செய்து வழிபட மனகுழப்பம் நீங்கும். எதிலும் வெற்றி உண்டாகும்.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) எதிரியின் நிலை அறிந்து அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் திறமை உடைய சிம்மராசியினரே இந்த வாரம் புதன் சஞ்சாரம் ராசிக்கு 9ல் இருப்பதால் எதையும் ஒரு முறைக்கு பலமுறை ஆராய்ந்து முடிவு எடுப்பது நல்லது. காரியங்களில் தடைதாமதம் உண்டாகலாம். முயற்சிகளில் உடனடி யாக பலன் காண்பது அரிது. எந்த ஒரு வேலைக்கும் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். ராசியில் சஞ்சாரம் செய்யும் வக்கிர சனியின் பார்வையில் ரத்தகாரகன் செவ்வாய் இருப்பதால் வாகனங்களில் செல்லும் போதும் ஆயுதங் களை கையாளும் போதும் கவனம் தேவை. சகோதரர்கள் வழியில் ஏதேனும் பிரச்சனை வரலாம்.
தொழில் வியாபாரம் குறிப்பாக விவசாயம், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் குறைவான லாபம் வரக் காண்பார்கள். தொழில் வியாபரம் தொடர்பான அலைச்சல் இருக்கும். உத்தி யோகஸ்தர்கள் மேல் அதிகாரிகளின் சொல்படி நடப்பது நல்லது. வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது முன்னேற்றத் துக்கு உதவும்.
குடும்பத்தில் இருப்பவர்களின் செயல் கள் கோபம் தூண்டக்கூடிய வகையில் இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக் கிடையே அனுசரித்து செல்வதும் நன்மை தரும்.
பெண்களுக்கு: எந்த ஒரு வேலைக்காக வும் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். பயணம் செய்யும் போது கவனம் தேவை.
மாணவர்களுக்கு: எதிர்கால கல்வியை பற்றி சிந்தனை மேலோங்கும். கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது வெற்றிக்கு உதவும்.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவனை வணங்க காரிய வெற்றி உண்டாகும்.
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்) மிக எளிதில் எதிலும் உயர்ந்த நிலைக்கு வரக்கூடிய திறமை மிகுந்த கன்னி ராசியினரே இந்த வாரம் ராசியாதிபதி புதன் ராசிக்கு 8ல் சஞ்சாரம் செய்வது காரியங்கள் வெற்றியை தரும். பண வரத்து வழக்கத்தை விட அதிகரிக்கும். ஆனால் செலவும் அதற்கு ஏற்றார்போல் இருக்கும். மற்றவர்களது உதவியும் கிடைக்கும். சாதூர்யமாக பேசிஎதிலும் வெற்றி காண்பீர்கள். அனுபவ பூர்வமான அறிவுதிறன் அதிகரிக்கும்.
தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். பேச்சாற்றலால் வாடிக்கையாளர் களை கவர்ந்து இழுப்பீர்கள். பங்கு மார்க்கெட் லாபம் ஓரளவு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல்திறன் அதிகரிக்கும். பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
குடும்பத்தில் மனம் மகிழும்படியான நிகழ்ச்சி நடக்கும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். சிலர் அதற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள். கணவன், மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்யம் உண்டாகும்.
பெண்களுக்கு:சாதூர்யமாக பேசி எல்லா காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து கூடும். பொறுப்புகள் அதிகரிக்கும்.
மாணவர்களுக்கு: கல்விக்கான செலவு கூடும். சகமாணவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான பலன் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: திருப்பதி பெருமாளை வணங்க கடன் சுமை குறையும். வாழ்க்கை யில் முன்னேற்றம் உண்டாகும்.
துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்) சொந்த முயற்சியில் முன்னுக்கு வரக் கூடிய ஆற்றல் உடைய துலா ராசியினரே இந்த வாரம் ராசிக்கு 7ல் புதன் சஞ்சாரம் செய்வதும் ராசியாதிபதி சுக்கிரன் ராசிக்கு 6ல் சூரியனுடன் சேர்ந்து இருப்பதும் திடீர் கோபம் உண்டாகும். விருப்பத்திற்கு மாறாக எதுவும் நடக்கும். ஆனால் பகைகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். பணவரத்து திருப்திகரமாக இருக் கும். பயணங்கள் சாதகமான பலன் தரலாம்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரத் தில் மன நிறைவு காண்பீர்கள். உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்ச லுக்கு பிறகு கடினமான காரியம் கூட கைகூடும். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். சக ஊழியர்கள், தொழில் கூட்டாளிகள் விஷயங்களில் கவனமாக செயல்படுவது நல்லது.
குடும்பத்தில் வீண் பிரச்சனை ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணையின் செயல்கள் உங்களுக்கு அதிருப்தி ஏற்படும் விதத் தில் இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது ஆறுதலை தரும்.
பெண்களுக்கு: கோபகத்தை குறைத்துக் கொள்வது நன்மை தரும். எதிர்ப்புகள் விலகும். பயணங்கள் சாதகமான பலன் தரும்.
மாணவர்களுக்கு: சக மாணவர்களிடமும் நண்பர்களிடமும் கோபப்படாமல் சாதுரி யமாக பேசுவது நன்மை தரும். கல்வியில் வெற்றிபெற கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் சுக்கிர பகவானை தீபம் ஏற்றி வணங்க எதிர் பார்த்த காரியங்கள் நன்றாக நடந்து முடியும். பணவரத்து கூடும்.
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம்,அனுஷம், கேட்டை) உழைப்பு, செயல்திறன், பேச்சு ஆகிய வற்றில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக் கும் விருச்சிகராசியினரே! இந்த வாரம் ராசிக்கு 6ல் புதன் சஞ்சாரம் செய்வது பலவகையான யோகத்தை தரும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எங்கும் எல்லோரிடத்தி லும் மதிப்பும், மரியாதையும் அதிகரிக் கும். பலரும் உங்களை தேடி வருவார்கள். அடுத்தவர்களுக்காக உதவிகள் செய்வ தில் உற்சாகம் உண்டாகும்.
தொழில், வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். எழுத்து தொழிலில் இருப்பவர் கள் முன்னேற்றம் காண்பார்கள். தொழில், வியாபாரம் தொடர்பாக துணிச்ச லாக எடுக்கும் முடிவுகள் வெற்றியை தரும். பணியாட்கள் மூலம் நன்மை உண்டாகும்.
உத்தியோகஸ் தர்களுக்கு வேலையில் முன்னேற்றம் ஏற்படும். மேல் அதிகாரிகள் மூலம் நன்மை கிடைக்க பெறுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமும் மன நிம்மதியும் இருக்கும். உறவினர்கள், நண்பர்களின் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாமல் நிதானமாக பேசுவது நல்லது. வழக்கு விவகாரங்களை தள்ளிப்போடுவதும் நன்மை தரும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
பெண்களுக்கு: துணிச்சலுடன் எதையும் செய்து வெற்றி பெறுவீர்கள். உங்கள் உதவியை நாடி பலரும் வருவார்கள். சந்தோஷமான மன நிலை இருக்கும்.
மாணவர்களுக்கு: போட்டி, பந்தயங்க ளில் துணிச்சலுடன் ஈடுபட்டு சாதகமான நிலை காண்பீர்கள். ஊக்கத்துடன் படிப்பது நல்லது. சந்திராஷ்டமம்: இல்லை
பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வழிபட எல்லா பிரச்சனைகளும் தீரும். மனக்கவலை நீங்கும்.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) பிறர் மதிக்கும்படி நடந்துகொள்ளும் தனுசு ராசியினரே நீங்கள் சுயமாக சிந்தித்து செயலாற்றும் திறமை பெற்றவர். இந்த வாரம் புதன் சஞ்சாரம் ராசிக்கு 5ல் இருப்பதால் பணவரத்து குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க காலதாமதம் ஆகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். எனவே யாருக்கும் எந்த வாக்கு றுதியையும் அளிக்காமல் இருப்பது நல்லது. அடுத்தவருக்கு செய்யும் உதவிகள் சில நேரத்தில் உங்களுக்கு எதிராகவே மாறலாம் கவனமாக செயல் படுவது நல்லது.
தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தா லும் பழைய பாக்கிகள் வசூலாவது ஆறுதலை தரும். புதிய ஆர்டர்கள் கிடைப் பது தாமதமாகலாம். உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமாக தங்களது பணிகளை கவனிப்பது நல்லது. மேல் அதிகாரிகள் சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மன மகிழ்ச்சி ஏற்பட அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளின் கல்வி யில் கவனம் செலுத்துவது நன்மையை தரும். வழக்கு விவகாரங் களில் ஈடு படாமல் தவிர்ப்பது நல்லது.
பெண்களுக்கு: எதிலும் காலதாமதம் உண்டாகும். சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். பணவரத்து தாமதப்படலாம்.
மாணவர்களுக்கு: பாடங்களை படிப்ப தில் மெத்தனம் காட்டாமல் இருப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: 5.4.2009 அன்று மாலை 6.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்ப தால் அன்று எதிலும் கவனமாக இருப்பது நல்லது.
பரிகாரம்: குரு ராகவேந்திரரை வியாழக் கிழமையில் வணங்கி வர மன அமைதி உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும்.
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்) சொந்த உழைப்பினால் உயரும் திறமை உடைய மகர ராசியினரே உங்க ளுக்கு பிறரின் உதவிகள் கிடைக்கும். இந்த வாரம் ராசிக்கு நான்கில் புதன் சஞ் சாரம் செய்வது ஆக்கபூர்வமான யோசனை களை தரும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர் கள். சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். புதிய விஷயங் களை அறிந்து கொள்வதில் ஆர்வம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும்.
தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்வதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கப்பெறுவீர்கள். தொழிலை விரிவு படுத்த ஆலோசனைகளை மேற்கொள் வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்க ளின் செயல்திறமை வெளிப் படும். அதனால் மேல் அதிகாரிகளின் பாராட் டும் கிடைக்கப்பெறுவீர்கள். வர வேண்டிய பணம் வந்து சேரும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களால் அதிகப் படி வருமானம் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே சுமூகமான உறவு காணப்படும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பாடுபடுவீர்கள். தாய், தந்தை யரின் உடல் நிலையில் கவனம் தேவை.
பெண்களுக்கு: எந்த விஷயத்திலும் தெளிவான முடிவை எடுப்பீர்கள். புதிய விஷயங்களை அறிந்துகொள்ள ஆர்வம் உண்டாகும்.
மாணவர்களுக்கு: கல்வியில் முன்னேற் றம் இருக்கும். அறிவியல், கணித பாடங் களில் கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும்.
சந்திராஷ்டமம்: 5.4.2009 மாலை 6.15 மணிக்கு தொடங்கி 7.4.2009 இரவு 10.10 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.
பரிகாரம்: துர்கை அம்மனுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமையில் தீபம் ஏற்றி வழிபட எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தில் அமைதி நிலவும். கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்) எதிர்காலத்தை மனதில் கொண்டு திட்டமிட்டு செயலாற்றும் கும்ப ராசியினரே இந்த வாரம் ராசியாதிபதி வக்கிரசனியின் பார்வை ராசியில் சஞ்சாரம் செய்யும் செவ்வாயின் மீது படிவதால் அடுத்தவர்களுக்கு உதவப் போய் அதனால் அவதிப்பட்ட நேரலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போதும் பணிபுரியும் இடத்தில் ஆயுதங்களை கையாளும்போதும் கவனம் தேவை. ராசிக்கு மூன்றில் புதன் சஞ்சாரம் இருப்பதால் செலவு அதிகரிக்கும். மனதில் இருந்த உற்சாகம் குறையும்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சற்று விழிப்புடன் இருப்பது நல்லது. பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்குவர தாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் இருப்பவர் கள் அலைச்சலையும், வேலை பளுவை யும் சந்திக்க நேரிடும். சிலருக்கு இட மாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் கணவன்மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதும் நல்லது. சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எச்சரிக்கை தேவை.
பெண்களுக்கு: அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்யும்போது கவனமாக இருப்பது நல்லது. செலவு அதிகரிக்கும். வீண் கவலை உண்டாகலாம்.
மாணவர்களுக்கு: கல்வி பற்றிய கவலையை தவிர்த்து கூடுதல் கவனத்து டன் படிப்பது நல்லது. வீண் அலைச்சல் இருக்கும்.
சந்திராஷ்டமம்: 7.4.2009 இரவு 10.10 மணி முதல் 10.4.2009 அதிகாலை 4.10 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தடை தாமதம் ஏற்படலாம். கூடுதல் கவனத்துடன் இருப்பதும் புதிய முயற்சி களை தள்ளிப்போடுவதும் நல்லது.
பரிகாரம்: சனிக்கிழமையில் எள் சாதம் சனி பகவானுக்கு நைவேத்தியம் செய்து காகத்திற்கு வைக்க கஷ்டங்கள் குறை யும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
அடுத்தவரை பயன்படுத்தி பல காரியங்களை சாதிக்கும் திறமை உடைய மீனராசியினரே நீங்கள் பொது வாழ்க்கை யில் புகழ்பெறுவீர்கள். இந்த வாரம் ராசிக்கு இரண்டில் புதன் சஞ்சாரம் செய்வது செலவுகள் கூடும். எதையும் எதிர்த்து நிற்பதை தவிர்த்து அனுசரித்து செல்வது முன்னேற்றத்திற்கு உதவும். அடுத்தவர்களின் நலனுக்காக உழைக்க வேண்டி இருக்கும். சொத்துக்களை வாங்கும்போதும் விற்கும்போதும் கவன மாக இருப்பது நல்லது. ராசியில் சூரியன், வக்கிரமடைந்து சுக்கிரன் சஞ்சாரம் இருப்பதால் இடமாற்றம் உண்டாகலாம். ஆடை, ஆபரணம் சேரும்.
தொழில், வியாபாரம் சற்று நிதானமாக நடக்கும் எதிர்பார்த்த லாபம் இருந்தாலும் தொழில் தொடர்பான செலவும் கூடும். சரக்குகளை வாங்கும்போது கவனித்து வாங்குவதும் பாதுகாப்பாக வைப்பதும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம்.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபப் படாமல் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நல்லது. சகோதரர் வகையில் உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாக லாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன், மனைவிக் கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.
பெண்களுக்கு: ஆடை, ஆபரணங்கள் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். நிதான மாக பேசி மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது காரிய வெற்றிக்கு உதவும்.
மாணவர்களுக்கு: கல்விக்கு தேவையான உபகரணங்கள், புத்தகங்கள் வாங்கு வீர்கள். கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.
சந்திராஷ்டமம்: 10.4.2009 அதிகாலை 4.10 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்கி 11.4.2009 அன்று முழுவதும் இருப்பதால் எதிலும் கவனமாக செயல் படுவதுடன் புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவதும் நல்லது.
பரிகாரம்: குல தெய்வத்தை தீபம் ஏற்றி வணங்கி வருவது குழப்பத்தை போக் கும். செல்வம் செல்வம் செல்வாக்கு உயரச் செய்யும். தடை, தாமதம் நீங்கும். |