இந்த படத்துக்காக சில பாடல் காட்சிகள் ஆஸ்திரேலியாவில் நெஞ்சை கொள்ளை கொள்ளும் இடங்களில் படமாக்கப்பட்டுள்ளன. விஜய் ஆன்டனி இசையமைத்துள்ளார். எம்ஜிஆர் படப் பாடல் ஒன்று அழகாக ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது.
உணர்வுபூர்வமான படங்கள் எப்போதும் வெற்றிபெறும் என்று கூறும் விக்ரமன் இந்த படம் நிச்சயம் முத்திரை பதிக்கும் என்று கூறுகிறார். அம்மா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் மீரா ஜாஸ்மின், மீனா நாயகிகளாக நடித்துள்ளனர். அம்பிகா, ரமேஷ்கண்ணா, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். |